பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

IBS எனும் குடல் எரிவு

IBS  எனும் குடல் எரிவு (வயிறு எரிதல்)

ஐ.பி.ஸ்(IBS-Irritable Bowel syndrome) என்பது எரிச்சல் ஊட்டக்கூடிய குடற்தொகுதிக்கோளாறு   ஆகும். சமிபாட்டு தொகுதியுடன் சம்மந்தப்பட்ட இந்த நோயால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். ஆண்களைப் பார்கிலும் இரண்டு மடங்கான பெண்கள் இதனால் பதிக்கபடுகின்றனர்.

இன்டிஷ்ஷனால் நெக்ரோசிஸ்((Intistional Necrosis) , முகுஸ் கொலிடிஸ் (mucous colitis), ஸ்பாஸ்டிக் கொலிடிஸ்(spatic colitis) ஆகிய பெயர்களாலும்  இந்நோயை மருத்துவர்கள் அடயாளப்படுத்துவர்.

இருபத்தைந்து முதல் நாற்பது வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள்  ஐ.பி.ஸ் ஆல்  துன்புறுவதைக் காண முடிகிறது.

இந்நோய் நிலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணவுக் கால்வாய்த் தொகுதியில் தசை அசைவுகள்  சீரற்றுப் போவதோடு அவ்  அசைவுகள் ஒருமுகப்படுவதும் இல்லை. இவ்வாறான  நிலை  குழலின் கழிவகற்றல் செயற்பாட்டில் தடங்கல்களை ஏற்படுத்துவதனால் சிறுகுடலில் நச்சுப்பதார்த்தமும்  சளியும் தேங்கத் தொடங்குகிறது. இவ்வாறு தேங்கும் கழிவுப் பொருட்கள் அபான வாயு மற்றும் மலவெளியேற்றத்தை தடுக்கின்றன.  இதனால் வயிற்றுப்பொருமல்,மலச்சிக்கல் ஆகியன ஏற்படுகின்றன.

உணாவுக் கால்வாயின் உட்புறச் சுவர்களின் இந்நோய் எதுவித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும் வாய் தொடங்கி மலம் தேங்கக்கூடிய  பெருங்குடல் வரையான முழு உணவுக் கால்வாய் தொகுதியையும் பாதித்து விடுகிறது.

இந்த நோய்க்குரிய மிகச் சரியான காரணம் இன்னமும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.  ஆனால் குடற்பகுதியில் சுரக்கப்படும் ஓமோன்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.உணவுக் கால்வாயில் காணப்படக்கூடிய  பக்றீரியக்கள், வைரஸ் போன்ற நுண்ணங்கிகளும் சிலவேளை  இதற்கு  காரணமாகலாம்.

மேலும் சீரற்ற வாழ்க்கை முறை, உணவு ஒவ்வாமை,  Antibiotics (அன்றிபயோற்றிக்)  எனப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகள்,பேதி  மருந்து போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது, மற்றும் உணவுக் கால்வாயில் இயற்கையகக் காணப்படும் நுண்ணுயிர்களின் சமநிலை குழம்பி விடுவதும் ௯ட காரணமாகலாம்.

அத்தோடு அதிகமான மன அழுத்தங்களோடு நீண்ட காலம் கடத்துதலும் இதற்கு மற்றுமொரு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

நோய் அறிகுறிகள்:

வயிற்று வலி, உடல் எடை இழப்பு, வயிற்றுப்பொருமல்,மலச்சிக்கல் அல்லது வயிற்றோட்டம்

அபானவாயுப் போக்கு:

உணவு ஒவ்வாமை,மலத்துடன் சளி காணப்படும்,வாந்தி எடுப்பது போன்ற உணர்வு, தாங்க முடியாத தலையிடி போன்ற மேற்குறிப்பிட அறிகுறிகளைக் கொண்டவர்கள் சிலநேரங்களில் உண்பதற்க்கே அச்சப்படுவர். இந்நிலையால் பாதிப்புற்றவர்கள் எந்த உணவை உட்கொண்டாலும் உடலுக்குத் தேவையான உணவு அகத்துறிஞ்சல் மந்தமாகவே இடம் பெறுகின்றது. இதனால் கிட்டதட்ட 30 வீதமான புரதத்தையும் உடலுக்குத் தேவையான ஏனைய கனியுப்புகளையும் பெற்றுக்கொள்ள மேலதிகமாக குறைநிரப்பிகளை உள்ளெடுக்க வேண்டியுள்ளது.

தொடர்புபடும்  ஏனைய நோய் நிலைகள்:

கண்ண்டிட , குடல் புற்று நோய், நீரிழிவு, பித்தப்பை நோய் , உணவு அகத்துறுஞ்சல் குறைபாடுகள், சதியி சுரப்பு குறைபாடுகள், குடற்புண்கள், நுண்ணங்கி ஒட்டுண்ணிகள் போன்ற நோய் நிலைகளும் இன்நோயுடன் தொடர்புபட்டுள்ளன.

அத்துடன் ஐ.பி.ஸ் (IBS) உடன் ரேக்ரிவ்  அர்த்தரிடிஸ்(ReactiveArtharitis) எனும் முட்டுவலி தொடர்வுபடுகிறது.

ஐ.பி.ஸ்(IBS) தானா? எவ்வாறு அறிந்துகொள்வது?

குடல் புற்றுநோய், தீமைபயக்காத கட்டிகள், மனச்சோர்வு, மலச்சிக்கல்,  பேதி ,இலக்டோஸ் ஒவ்வாமை போன்றவற்றையும் ஐ.பி.ஸ்  நோய்க்குரிய அதே அறிகுறிகளைக் காட்டுவதால் ஐ.பி.ஸ்(IBS)  ஐ  திட்டவட்டமாக அறிந்து கொள்வதற்க்கு சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

பரிசோதனைகள்:

குதவாயில் நுண்ணுயிர் சோதனை, மலச்சோதனை போன்ற சோதனைகள் மூலம் உணவுக்கால்வாயில் பக்ரீரியா  இரத்தம் அல்லது வேறு  ஏதாவது ஒட்டுண்ணி நுண்ணங்கிகள் காணப்படுகின்றன என அரிந்து அவை எதுவும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டால் தான் இது ஐ.பி.ஸ்(IBS) என்று  முடிவுக்கு வர முடிகிறது.

இது ஆபத்தானதா?

ஐ.பி.ஸ்(IBS) ஒரு உயிராபத்து இல்லாதது ஆனால் வேதனையான எரிச்சலை தரக்கூடிய நோய் நிலையாகும்.இந்நோயால் பீடிக்கப்படுபவர் ஒருவர் சாதரணமாகவே வாழ முடியும்.உணவு, வாழ்க்கை முறை, முறையான உடற்பயிற்சி போன்றவை இவர்களுக்கு முக்கியமானவை.

ஐ.பி.ஸ்(IBS)  அறிவுரைகள்:

நார்ச்சத்து கூடிய உணவு வகைகள் உ+ம் தவிடுடன் கூடிய அரிசி குறிப்பாக சிவப்பு அரிசி,அவரைக்குடும்ப தாவர  உணவுகளை உட்கொள்ளவேண்டும். சிலியம்(Psyllium), ஓட்  விதை(Oats),ப்லக்ஸ்சீட்ஸ் (Flaxseeds) அகியவற்றை ஒழுங்காக மாற்றி மாற்றி உண்ண வேண்டும்.

உணவுக்கால்வாயில் சளி சுரப்பை  தூண்டக்௯டியதும்,உட்டச்சத்து அகத்துரிஞ்சலை தடை செய்யக்௯டியதுமான எல்லா  உணவுகளையும் தவிர்க்க வேண்டும் உ+ம்  காபின், சீனி, இனிப்பு, சொக்கலேட்  பசுப்பால் சேர்த்த உணவுப்பண்டங்கள், ஆரன்சு , கிரேப், வாயூட்டப்பட்ட குடிபானங்கள்,  மனிடோல்(Mannitol) , சொர்பிடோல்(Sorbitol) போன்ற பதார்த்தம் கலந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

வயிற்றில் அபானவாயுவை அதிகம் உண்டாக்கும் உணவு வகைகளை (உ+ம் பீன்ஸ், புரோகோலி, கோவா) போன்றவற்றை அளவுடன் உண்ண வேண்டும்.

மதுபானம் அருந்தல், புகை பிடித்தல் அகியவற்றை  முற்றாக நிறுத்தவேண்டும். இவை  இரண்டும் உணவுக்கால்வாயில் உட்சுவரை பாதிக்கும்.

உணவு ஒவ்வாமைக்கான சோதனையை செய்து பார்த்து, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்து கொள்ள வேண்டும்.

உணவை  வாய்க்குழியில் வைத்து நன்கு அரைத்து பின்னர் விழுங்க வேண்டும். அவசரத்தில் உண்ணக்கூடாது.

ஆழ்ந்த  மூச்சுப் பயிற்சி  செய்யவேண்டும்.வயிற்றின் எல்லப் பாகங்களும் பிராணயவாயு  சென்றடைய  இப்பயிற்சி உதவுகிறது.

இடுப்பு பகுதியில் இறுக்கமான ஆடைகள் அணியக்௯டாது.

உண்டபின்  நூறடி உலாவி உறங்குவது  நல்லது. உணவு அருந்தி 1-2 மணித்தியாலங்களில் பின்னரே  படுத்து உறங்க வேண்டும்.