பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

Ayurvedam

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் என்பது ‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ (சயன்ஸ் ஒவ் லய்வ்) எனக் குறிப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த இயற்கையான குணப்படுத்தும் முறையானது இந்திய உபகண்டத்தில் ஏறக்குறைய 4000 கி.மு காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது. ஞானிகளும், தவசிகளும், முனிவர்களும், வருவது உணர்வோரும், வேதங்களின் ஒரு பகுதியான ஆயுர்வேதத்தை உருவாக்கினர். ஜோதிடம் (அஸ்றோலொயி), வேதங்கள், ஒரு விதியின் கீழியங்கும் பிரபஞ்ச நடத்தையின் விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ள மேன்மையான அறிவுப் பெட்டகமாகும். யோக அப்பியாசம், தியானம் (மெடிற்ரேசன்), சோதிடம் (அஸ்றோலொயி) போன்றன வேதங்களின் பகுதியாகும். இதில் ஆயுர்வேதம் மனித உடலின் நிலைகள் பற்றிய அறிவாகும். மூலிகை மருத்துவம், உணவு முறை (பத்திய உணவு) உடலை பிடித்துவிடுதல், சத்திர சிகிச்சை, உளவியல், ஆன்மீகம் ஆகியன ஆயுர் வேத பிரிவின் முக்கிய பகுதிகளாகும். ஆயுர் வேதமானது ஞான ஒளி பெற்று தந்த வேதங்களில் உடல் நோயைக் குணப்படுத்துவதற்காக கிடைத்த மருத்துவ அறிவாகும். மிகவும் குறிப்பாகவும், உள்ளடக்கமாகவும் தரப்பட்டிருக்கும் ஆயுர்வேத முறைகள் பாரம்பரிய சீன வைத்திய (ரடிசனல் சைனீஸ் மெடிசின்) முறையிலும் பல ஒற்றுமைகளைக் காட்டி நிற்கின்றது. அண்மைக் கால தொல் பொருள் ஆராட்சிகளிலிருந்து, ஆயுர் வேத வைத்திய முறையானது பழைமையானதும், வைத்திய முறைகளில் முதன்மையானதுமாக பின்பற்றப்பட்டு வந்துமாக அறியக்கிடக்கின்றது.

மிக நீண்ட வரலாற்றில் ஆயுர் வேதம் பல படிகளில் மாற்றங்ளை கண்டுள்ளது. வேத காலத்திலிருந்தும், இந்து கலாச்சாரத்திலிருந்தும், இந்தோனேசியாவிலிருந்து, கிரேக்கம் வரை ஆயுர் வேத மருந்;து முறை பரவியிருந்தது. பின்னய நாட்களில், கிரேக்கர் இதனைத் தழுவி தமக்கென ஒரு முறையைச் செய்தனர். புத்த மதம் பரப்பச் சென்ற விடங்களிலெல்லாம். ஆயுர் வேதமும் பரப்பப்பட்டது. இவ்வாறாக தீபெத், இலங்கை, பர்மா போன்ற புத்த மதம் தழுவிய நாடுகளிலெல்லாம், சீன வைத்திய முறையிலும் ஊடுருவி நிற்கின்றது. ஆயுர் வேத முறையானது பல நாடுகளிலும், காலநிலைகளிலும் பண்பாடுகளிலும் நோய் தீர்க்கும் முறையாகப் பயன்பட்டு முதிர்ச்சியடைந்திருக்கின்றது

இன்றைய நாட்களில், பண்டைய நோய்தீர்;க்கும் வழிமுறைகள் மீள் ஆராய்வுக்கும், மீள் பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் மருந்தாகவோ அல்லது ஆரோக்கியம் தரும் உணவுப் பொருளாகவோ உட்கொள்ளப்படுகின்றன. ஒரு உலக வைத்தியம் அல்லது மருந்து, அதாவது எந்த நாட்டில் என்ன மூலிகை கிடைக்கின்றதோ அது நோயுற்ற வேற்று நாட்டவரால் பயன்படுத்தப்படக் கூடியதான சிறப்பான அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் ஆயுர்வேத முறைகளும் சுதேசி வைத்திய முறைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் ஆயுர்வேதம், சீன பாரம்பரிய மருந்து (ரிசிஎம்) ஜரோப்பிய மருத்துவம் போன்றன பல வகைகளில் ஒத்திருப்பதனால் இவை யாவற்றையும் ஒருங்கிணைப்பதும் இலகுவானதாகும்.

ஆயுர் வேத முறையில் நோய் தீர்க்கும் திட்டமானது இரு படி நிலைகளில் செயற்படுகின்றது. முதற்படியில் சாமான்யர் கூட சுய கவனத்தில் கொண்டு வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்து நோய் தடுப்பு செய்து வாழ்வதும், இரண்டாவது படியில் இயற்கை அல்லது மூலிகை வைத்தியர்கள் தமது சிகிச்சைக் கூடத்தில் நோயுற்றோருக்காக பயன்படுத்துவதுமாகும். பல பொதுவாக தோன்றக் கூடிய நோய் நிலைகளுக்கு நாமாகவே கைமருந்து செய்து கொள்ளலாம். நோயிலிருந்து நாமாகத்தான் குணம் பெறவேண்டும். காலக்கிரமமாக நாம் சில முறைகளை அல்லது பயிற்சிகளை அல்லது ஆசனங்களைச் செய்து வருவோமானால் இயற்கையுடன் ஒன்றிப்போய் வாழ்வதனால் நோயணுகா வண்ணம் வாழலாம். இல்லாத போதில் விசேடமான, சிக்கலான வைத்திய முறைகள் தேவைப்படும் இவ்விடத்தில் ஆயுர் வேத வைத்தியரின் தேவையும் சேவையும் முக்கியமாகும்.

உயிர் இயக்கத்திலிருப்பவை, பஞ்ச பூதங்களால் (காற்று, நீர், தீ, பூமி(மண்), ஆகாயம்) ஆனவையாகவும், இவை யாவும் இடைவிடாது மாற்றத்திற்குள்ளாவதாகவும், தொடர்ச்சியான தொடர்பாடலுக்குள்ளாவதுமான அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டுள்ளது. உயிர்; துடிப்பிற்கு மிக முக்கியமான இந்த சக்தியை மூன்று தோசாக்களாக பிரித்திருக்கிறார்கள். வாத, பித்த, கப தோசாக்கள்.; ஒவ்வொருவருக்கும் காணப்பட்ட போதிலும் இவை தொடர்ச்சியாக மாற்றத்திற்குள்ளாகின்றன. ஒவ்வொரு மனித உடலிலும் திரி தோசாக்களின் அளவுகள், அவரின் உணவு, நாளின் நேரம், சூழல் காலநிலை, மனநிலை, அடக்கப்பட்ட மனவுணர்கள், மனவருத்த, வாழ்க்கைச் சுமைப்பழு அளவுகள் போன்ற காரணிகளால் மாற்றப்படுகின்றன. ஒருவருக்கு இயல்பாக இருக்க வேண்டிய தோசா நிலை சமன்நிலை மாற்றமடைந்து பிராணவோட்டம் – (உயிர் சக்தி) குழப்பமடைகிறது. உயிர்ச்சக்தியானது உணவாகவும், மூச்சுக்காற்றாகவும் உள்ளெடுக்கப்பட்டு, அக்னி அல்லது சமிபாட்டுத் தீயினால் சக்தியாக விடுவிக்கப்படுகின்றது. அக்னியின் அளவு குறைவாக இருக்கும் பொழுது உடலில் நஞ்சு (அமா) தேங்குவதனால், உடல் நோய்களுக்கு காரணமாகிறது எனக் கருதுகிறது. இதனால் தான் ஆயுர் வேத வைத்திய முறையில் உடலின் நஞ்சகற்றல் அல்லது கழிவகற்றல் (வியர்வை, சிறுநீர், மலம் – 3 கழிவுகள் (மாலா)) முறைகள் முக்கியப்படுத்தப்படுகின்றன. தோசாக்கள் சமநிலைப்படும் பொழுது உயிர்சக்தி அதிகரிக்க ஒருவர்; தனது பழைய அல்லது வழமையான நிலைக்குத் திரும்புகின்றார்;. சுமநிலையைப் பெறுவதற்கு, மூலிகை மருந்து, யோக ஆசனப்பயிற்சி, உடலை அழுத்துதல் (மசாச்), தியானம் போன்றன பயனபடுத்தபடுகின்றன.

எங்கள் ஒவ்வொருவரினுள்ளேயும் தெய்வத் தன்மை பொருந்திய குணப்படுத்துபவர் இருக்கின்றார். இவரே ஒருவரை உண்மையாக குணப்படுத்துபவராவர்;. இவரையன்றி யாரும் எதுவம் ஒருவரைக் குணப்படுத்திவிட முடியாதாதலால், இந்த குணப்படுதுபவரை நாம் செயற்பட செய்யவேண்டும்.

ஒரு வாழ்க்கைப் பயணத்தில் ஒருவர் தன்னைப்பற்றி, கற்றுக் கொள்வதனால் தன்னறிவில் மேம்படுகின்றார். எனவே நோய் நிலையொன்றானது எம்மைப்பற்றி மேலோட்டமாகவும், ஆழமாகவும் அறிந்து கொள்ளவைக்கும் ஒரு கருவியாகும். இவ்வாறு நாம் ஆழ்மனதுடன் தொடர்பையும் ஏற்ப்படுத்திவிடுவோமானால், மனதில் மகிழ்வும், ஒத்திசைவும் கிடைப்பதனால் புறச்சூழல் இடர்களை இலகுவில் வென்றுவிடலாம். உன்னையறிதலே உன்னைக் குணப்படுத்தும் முறையாகும்.