நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்).
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்):
நெற்ரி பொட் என்பது மூக்கின் உட்பகுதிகளை கழுவிச் சுத்தம் செய்யும் உபகரணமாகும். களி மண்ணினால் செய்யப்பட்ட இவ்வுபகரணம் நீட்டமான மூக்கை கொண்டிருக்கும். இதைப் பயன்படுத்தி மூக்கைக் கழுவும் பொழுது, சளி தங்கியிருக்கக் கூடிய குழிகளைச் சுத்தம் செய்து, மூக்கு வழியை ஈரப்படுத்தி, காற்றுப்பாதையின் ஆரோக்கியத்தை மீளக் கொண்டுவருகின்றது. ஒவ்வாமைக் காரணிகள், தடிமன், தலையிடி, சளியடைப்பினால் ஏற்ப்படும் தலைக்குத்து (சையனசைரிஸ்) போன்றவற்றிலிருந்து விடுதலை பெற உதவுகின்றது. மிகப்பழைமையான யோகா அப்பியாச முறைகளில் கூட, சளி தடிமன், ஒவ்வாமை, ஆஸ்மா போன்ற நோய் நிலைகளுக்கு மிகவும் நோய் நிவாரணம் தரும் வகையில் பயன்பட்டிருக்கின்றது. .
£ 13.99
back |