மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..!
உடலுறுதி வீடும் தோட்டமும் உணவும் பானமும் மருத்துவ சிகிச்சை வகைகள் செய்திப்பலகை கேள்வி-பதில்
பிரிவுகள்
Human Body
பிரிவுகள்

  • கட்டுரைகள்
    • கடுமையான ஒற்றைத் த....
      கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் .....
      மேலும்
    • டிப்பிறசன் - மன விர....
      டிப்பிறசன் என்ற மன விரக்திநிலை: நாம.....
      மேலும்
    • விட்ரிலைகோ - தோல் ந....
      விட்ரிலைகோ - தோல் நிறம் மாறுதல் கறுப.....
      மேலும்
    • ஆண்மைக் குறைபாடு....
      ஆண்மைக் குறைபாடு உலகில் பல மூலைகளி.....
      மேலும்
    • விரைவில் விந்து வெ....
      விரைவில் விந்து வெளிப்படுதலும் ஆண்க.....
      மேலும்
    • உடலின் நோயெதிர்ப்....
      உடலின் நோயெதிர்ப்புச் சக்தி பருவகா.....
      மேலும்
    • ஏ.டி.எச்.டி....
      ஏ.டி.எச்.டி (அற்ரென்சன் டெவிசிற் கைப்ப.....
      மேலும்
    • கன்டிடா....
      கன்டிடா என்றால் என்ன? கன்டிடா அல்பி.....
      மேலும்
    • வெங்காயம்....
      வெங்காயம் போசாக்கு உயிர்ச்சத்துக்.....
      மேலும்
    மேலதிக கட்டுரைகள்
    இந்த வெப்தளத்தை நண்பர் ஒருவருக்கு தெரிவிக்க
     
    விடயக்குறிப்பு

    நரம்புத் தொகுதி > ஏ.டி.எச்.டி
    ஏ.டி.எச்.டி..
    Added :2008-03-25 06:48:09
    ஏ.டி.எச்.டி (அற்ரென்சன் டெவிசிற் கைப்பறக்ரீவ் டிஸ்ஓடர்) ஏ.டி.டி(அற்ரென்சன் டெவிசிற் டிஸ்ஓடர்) ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி என்றால் என்ன? மூளையின் குறிப்பிட்ட செயற்பாடுகளின் சில ஒழுங்கு தவறி போயிருக்கும் நிலைக்கு புதிதாக தரப்பட்ட பெயரே ஏ.டி.டி, ஏ.டி.எச்.டி ஆகும். இங்கு ஏ.டி.டி, ஏ.டி.எச்.டி என்னவென்பதை வரையறுப்பதே குழப்பமாகவிருக்கிறது. அமெறிக்கன் சைக்காற்ரிக் அசோசியேசன் ஏ.டி.எச்.டி ஐ பின்வரும் மூன்று வகையாகப் பிரித்துள்ளது. 1. ஏ.டி.எச்.டி - இன்அற்ரென்ரீவ் டிஸ்ஓடர் 2. ஏ.டி.டி - கைப்பறக்ரீவ் இம்பல்சீவ் டிஸ்ஓடர் 3. மேலிருவகையின் சேர்க்கை ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி, சில வகையான பயின்திறன், நடத்தை ஒழுங்கீனங்களை உண்டுபண்ணுகின்றது. அநேகமான சந்தர்ப்பங்களில் மனக்குழப்பம் கண்டவருக்கும், குடும்பத்தின் ஏனையோருக்கும் கடினமான சூழலை உருவாக்குகின்றது. ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி நிலையைக் கொண்டிருக்கும் பிள்ளையொன்று பயின்திறன் குறைந்தது எனக் குறிக்கப்பட்டபோதும், இப்பிள்ளை சராசரி அல்லது அதற்கு மேலான நுண்ணறிவு அல்லது அறியும் திறன் கொண்டவர்களாகவும் நல்ல படைப்பாற்றல் (கிறியேற்ரீவ்) படைத்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள். திடீர் உணர்ச்சிக்கு ஆளாகும் நிலை (இம்பல்சீவ்னெஸ்), மனவமைதியில்லாநிலை (றெஸ்லெஸ்னெஸ்), வழமைக்கு மாறான அதிகமான துடியாட்டம் (கைப்பறக்ரீவ்), போதியளவு கவனஞ் செலுத்தாத நிலை (இன்அற்ரென்ரீவ்னெஸ்) போன்ற நிலைகள் பிள்ளையின் கற்கும் திறனையும், ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுவதையும் குறைத்துவிடுகிறது. வேறுபட்ட நோய்குறிகள், வேறுபட்ட சூழல் நிலைகளில் தோன்ற வாய்ப்புண்டு. இதற்கு அப்பிள்ளையின் சுய கட்டுப்பாட்டின் மேல் அச்சூழல் போடும், கடுமையான அதிகாரத்துடனான கேள்விகள் அல்லது நிபந்தனைகள் காரணமாகின்றன. சற்று நேரம் பாடசாலையில் ஓரிடத்தில் அமராத அல்லது ‘குழப்படிப் பையன்’ கவனத்தை ஈர்க்கும் அதேவேளை, எதிலும் கவனம் செலுத்தாத பகற்கனவு காணும் பிள்ளையொன்று யாராலுமே கவனிக்கப்படாமல் போகலாம். திடீரென செயல்தூண்டுதல் உணர்ச்சிக்குட்பட்டு, முன்யோசனையின்றி நடந்துகொள்ளும் பிள்ளையொன்றின் நடத்தை ‘ஒழுக்கப் பிரச்னை’யாக கருதப்படும் அதேவேளை எதிலும் பங்குபற்றாமல், மந்தமாக இருக்கும் ஒரு பிள்ளை செயல் தூண்டுதலுணர்ச்சியற்றவர் (அன்மோற்ரீவேரெட்) எனப் பார்க்கப்படுகிறது. இவர்கள் வேறு வேறு வகையான ஏ.டி.எச்.டி நிலையைக் கொண்டிருக்கலாம். சில சமயங்களில் எல்லாப் பிள்ளைகளும் அமைதியின்மையாகவோ, முன்யோசனை இன்றி காரியமாற்றவோ அல்லது பகற் கனவு கண்டு நேரத்தைக் கழிக்கவோ தான் செய்கிறார்கள். எப்பொழுது ஒரு பிள்ளையின், அதிகூடிய குழப்படி (கைப்பறக்ரீவ்), மனத்தடுமாற்றம் (டிஸ்றக்ரபிலிற்ரி), முன்யோசனையின்றி நடந்து கொள்ளுதல் போன்றன, பாடசாலையில் எதிர்பார்த்த முடிவுகளிலிருந்து மாற்றம் கண்டு நின்றால் அல்லது ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து பழக முடியாமல் போனால் அல்லது வீட்டில் நடத்தை மாறுபட்டு நிற்குமானால் இந்நிலை ஏ.டி.எச்.டி ஆகவிருக்குமா என சந்தேகப்பட இடமுண்டு. வேறு வேறு சூழ்நிலைகளில் நோய்குறி வேறுபட்டு நிற்பதால் ‘ஏ.டி.எச்.டி’ஐ இலகுவில் அறிந்துகொள்ள முடிவதில்லை. ‘ஏ.டி.டி’ ன் நோய்குறிகள் என்ன? - பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமை அல்லது குறிப்பிட்ட வேலையை தரப்பட்ட நேரத்தினுள் முடிக்கமுடியாமல் இருத்தல். - மிகுந்த மனக்குழப்பம் (எக்ஸ்றீம் டிஸ்றக்ரபிலிற்ரி) - காலம் தாழ்த்துதல் - மறதி, பொருட்களை அடிக்கடி தொலைத்தல் - பேச்சு, கேள்வியில் ஒழுங்கின்மை - ஒழுங்குசெய்தலும், காரியங்களை முடிதலும் கடினமாக இருத்தல் - கவனக்குறைவு, சில விபரங்களை அல்லது தொடரை ஞாபகப்படுத்த முடியாத நிலை - முன்யோசனையில்லாத பாடசாலை வேலைகள் (தெளிவாக காணக்கூடிய பிழைகளிலிருக்கும்) - ஒரு மனப்படுத்த முடியாமை (கவனத்தைக் குவிக்க முடியாமை) - தனக்குள்ளே பேசுதல் (பிறெயின் சற்ரர்) - பயில்திறன் குறைபாடுகள் - மனவெழுச்சி வேறுபாடுகள் - நித்திரை குழறுபடிகள் - இலக்கு, குறிக்கோள் இல்லாதிருத்தல் - வாலிபப்பராயத்தில் தொழிலோ அன்றி உறவுகளில் தோல்வி ‘ஏ.டி.எச்.டி’ இன் நோய்குறிகளென்ன? - கவனம் செலுத்த முடியாமை. ஒரு பிள்ளை ஆகக் குறைந்தது ஆறு மாதத்திற்காவது அவர்களின் வயதிற்கும், கற்கும் திறனுக்கும் மாறுபாடான முறையில் நடந்துகொண்டிருக்க வேண்டும். - குறிப்பாக கவனிக்காது விடுதல் அல்லது வேலை அல்லது விளையாட்டில் பிழைகள் விடுதல். - வேலைகளை முடிக்காது விடுதல், விளையாட்டில் கவனஞ் செலுத்தாமல் விடுதல் - செய்முறை நெறிமுறைகளை (இன்ஸ்றக்சன்ஸ்) முழுமையாக முடியும் வரை பின்பற்றாமலிருத்தல் அல்லது வீட்டு வேலையை செய்யாமலிருத்தல் (செய்யமாட்டேன் என்பதோ அல்லது விளக்கமின்மையோ காரணங்களல்ல) - காரியங்களை செய்வதில் ஒழுங்கின்மை - சிந்தித்து செய்யவேண்டிய வீட்டு வேலைகளைத் தவிர்த்தல் - காரிமாற்ற முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களைத் தொலைத்தல் (புத்தகம், பேனா, பென்சில், விளையாட்டுப் பொருட்கள்) - இலகுவில் கவனம் குழப்பப்படுதல் - நாளாந்த வேலைகளில் கவனக் குறைவு துடியாட்டம் - கைப்பறக்ரீவ்: ஒரு பிள்ளை ஆகக் குறைந்தது ஆறு மாதத்திற்காவது அவர்களின் வயதிற்கும், கற்கும் திறனுக்கும் மாறுபாடான முறையில் நடந்துகொண்டிருக்க வேண்டும். - தரிக்காமல் ஓடித்திரிதல், அதிகமாக ஏறிக்குதித்தல்(விடலைகளிலும் வாலிபப் பருவத்தினரிலும் மனவமைதியின்மை மட்டுமே காணப்படும்) - விளையாட்டுத் திடலில் தேவையில்லாமல் சத்தம் போடுதல் அல்லது அமைதியாக செய்யும் ஓய்வு நேர செயற்பாட்டை தொடர முடியாமை. - ஆசனத்தில் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டபோது, அதிலிருந்து எழுந்து போதல். - அமைதியில்லாமல் கையைப் பிசைந்துகொண்டு, காலை உரசிக்கொண்டு அல்லது ஆசனத்தல் வளைந்து நெளிதல். - முன்யோசனையின்றி செயற்படுதல் (இம்பல்சீவிற்ரி) - வினாவை முற்றாக கேட்பதற்கு முன்பே விடையை திடீரென சிந்திக்காமல் கூறுதல். - குழு விளையாட்டுக்களில் தனது முறைவரும் வரை காத்திராமல் அல்லது வரிகளில் காத்திருக்வேண்டிய போது அவசரப்படுதல். - மற்றவர்களின் வேலையில் அல்லது சம்பாசனையில் குறுக்கிடுதல் - சமூக கட்டுப்பாடுகளுக்கு அமைவாகவன்றி அதிகம் பேசுதல். ஒரு பிள்ளை ஏ.டி.எச்.டி நிலைக்குள்ளானது எனக்கூறுவதாயின், அப்பிள்ளை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் (உ-ம் பாடசாலை, வீடு), மேற்குறிப்பிட்ட வகையில் நடந்து கொண்டிருக்கவேண்டும். ஒரு பிள்ளை ஏ.டி.டி நிலையைப் பெற்றிருக்கிறது என்று அறிந்து கொள்வது ‘ஏ.டி.எச்.டி’ ஐ அறிந்து கொள்வதைவிட சற்றுக் கடினமானது. ஏனெனில் ‘ஏ.டி.டி’ ல் காணப்படும் எதிலும் ஈடுபடாத நிலை (இன்அற்ரென்ரீவ்னெஸ்), அதிக குழப்படி நிலையைப் போல் மற்றையோரின் கவனத்தை ஈர்ப்பதில்லை. எப்படியாயினும், காரியங்களை பின்போடுதல், முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமை, எடுத்த காரியத்தை நிறைவேற்ற முடியாமலிருத்தல் போன்ற இந்நோயின் குறிகள் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். இது வாலிபம் வரை நீண்டு போகலாம். ஏ.டி.எச்.டி மிகவும் குழப்படி (கைப்பறக்ரீவ்), அமைதியன்மை, பொறுமையின்மை, முன்யோசனையின் திடீரென செயற்படுதல் போன்ற நடத்தை குறிகளைக் காட்டுகின்றது. இவ்வாறிருந்த பொழுதிலும், ஏ.டி.எச்.டி நிலை கொண்ட பிள்ளைகள், கவனஞ் செலுத்தவும், காரியத்தை முடிக்கும் திறனையும் கொண்டிருக்கிறார்கள். தமக்கு பிடித்த விடயங்களில் நேரத்தை செலவிடுவார்கள். ஏ.டி.எச்.டி கொண்ட வாலிப வயதினர் தமது காரியங்களைச் செய்த பொழுதிலும் மிக விரைவாக கோபப்படுகின்றார்கள். ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி சேர்ந்த நிலையானது மிகவும் தளர்ச்சியடையச் செய்வதாகும். இந்நிலையையடைந்த பிள்ளைகள், தம்மைப் பற்றிய உயர்வான எண்ணத்தில் குறைவானவர்களாவும் (லோ செல்வ் எஸ்ரீம்), பொறுமையற்றவர்களாகவும், விதிகளின் படி ஒழுகாமலும், பொறுப்பற்ற முறையில் நடப்பதாகவும், அலங்கோலமாகவும் அல்லது சாமர்த்தியமற்ற வகையில் பேசுதலும், தாம் நினைப்பதே எப்பொழுதும் சரியானது என்ற எண்ணங்கொண்டவர்களாகவும், மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், சூழலுடன் சேர்ந்து போகாதவர்களாவும் காணப்படுகிறார்கள். ஏ.டி.எச்.டி உடன் வேறென்ன கடின நிலைகள் இருக்கக் கூடும்? வேறு நடத்தைப் பிரச்சனைகளுடன் கூடவே ‘ஏ.டி.எச்.டி’ உம் இருக்ககூடும். நடத்தைப் பிரச்சனைகளுக்கு ஏ.டி.எச்.டி மட்டுமே தனிக் காரணமாக முடியாது. பிள்ளைகளில் கடும்கோபம் திடீரென வெளிப்படுதல், நித்திரைக் குழறுபடிகள், அலங்கோல நிலை போன்ற நடத்தை ஒழுங்கீனங்களைக் காணமுடியும். ‘ஏ.டி.எச்.டி’யுடன் இருக்ககூடிய ஏனைய நடத்தை குழறுபடிகள் பின்வருமாறு: - எதிர்த்து, அடங்காமல், கீழ்படியாமல் இருக்கும் நடத்தை 60 சதவீதம்மான பிள்ளைகளில் காணப்படுகின்றது. இப்பிள்ளை கடுங்கோபங்கொண்டு, வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவது, மூத்தோர் சொல்லுக்கு கீழ்படியதொழுகுதல், வேண்டுமென்றே ஏனையோரை எரிச்சலூட்டுதல் போன்றவற்றை செய்கிறார்கள். - 25சதவீதம் பிள்ளைகளில் செயல் முறைக் குழறுபடிகளான, அழிவுச் செயல்கள், பொய் பேசுதல், விதிமுறைகள் அல்லது கட்;டளைகளை மீறுதல், களவெடுத்தல் போன்றன காணப்படுகின்றன. - மூளைக் கோளாறால் ஏற்படும், எழுத்துக் கூட்டி வாசித்து சொற்பொருள் காணமுடியாத பேரிடர் நிலை (டிஸ்லெக்சியா) போன்ற குறிப்பிட்ட பயின்திறன் குறைபாடுகள் 25சதவீதம் - 30சதவீதம் மான பிள்ளைகளில் காணப்படுகின்றது. - கடுமையான மனச்சோர்வு (டிஸ்பிறசன்) 35சதவீதம் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றது. - பதகளிப்பு (அங்சயிற்ரி) 30சதவீதம் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றது. ஏ.டி.எச்.டி தோன்றுவதற்கான காரணிகளாக, பரம்பரை அலகுகள், பதகளிப்பு, ஒவ்வாமை, கற்பகாலத்தில் புகைத்தல், பிறக்கும் போது ஒட்சிசன் பற்றாக்குறை, சூழல் தரும் மனவழுத்தம், மாசுக்கள, செயற்கை உணவுச் சுவையூட்டிகள் அல்லது காயமேற்பட்ட போது தொற்றுக்கள், ஈய நஞ்சூட்டல், மகப்பேற்றுக்கு முன்னான உடல்நலக் குறைவு போன்றன கூறப்படுகின்றன. ஏ.டி.எச்.டி எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது? மருத்துவர் ஒருவரினாலேயே ஏ.டி.எச்.டி நிலை தோன்றியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட வேண்டும். வழமையில், பொது வைத்தியர், மனநோய் மருத்துவர், குழந்தை மருத்துவர் போன்றவர்கள் நோயின் குறிகளைக் கண்டுபிடிக்கறார்கள். உளவியலாளர், பேச்சுப் பயிற்சியளிப்போர், ஆசிரியர்கள், உடல் நல சேவையாளர்கள் (கெல்த் விசிற்ர) போன்றவர்களும் தமது அவதானங்களைக் கூறுவதும் ஒரு பிள்ளைக்கு ஏ.டி.எச்.டி நிலை ஏற்பட்டதாவெனத் தீர்மானிக்க உதவியாகவிருக்கும். ஏ.டி.எச்.டி நிலையை உறுதியாக தீர்மானிப்பதற்கு தனியொரு முறை இன்னும் இல்லை, எனவே பலதரப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றில் சில பின்வருமாறு: ‘ஏ.டி.எச்.டி’ ஐ குணப்படுத்த என்ன வழிகளுண்டு? குறிப்பிட்ட குணப்படுத்தும் முறை பிள்ளையின் குறிப்பிட்ட நோய் நிலை சார்ந்தது. நோய் நிலையின் குறிப்பிட்ட பகுதி அல்லது அலகுகள் அவற்றின் தீவிர நிலை ஆகியவற்றினை தெரிந்துகொள்வதன் மூலம் அவற்றை முன்னேற்ற ஆவனசெய்யலாம். ஏ.டி.எச்.டி கண்ட பிள்ளையுடன் சமாளித்து வாழ்தல் இலகுவானதொரு காரியமல்ல. பெற்றோரும், ஆசிரியர்களும் ஏ.டி.எச்.டி நிலையைக் கொண்ட பிள்ளையின் பிரச்சினைக்குரிய நடத்தையை எவ்வாறு கொண்டு செல்லவேண்டுமென்னும் வழிகாட்டிகளாக இருந்த பொழுதும், இவர்களுக்கு உளவியலாளர் போன்றவர்களின் விசேட உதவியும் அறிவுரையும் தேவைப்படுகின்றன. உணவு: - எல்லாப் பழங்களும் காய்கறிகளும் உணவில் சேர்க்கப்படவேண்டும் (சலிசிலேற் கொண்டவற்றைத் தவிர்க்கவும்), அத்துடன் அரிசி, ஓட்ற் தானியம் மட்டும் கொண்ட பாண், சீரியல்ஸ், கிறெக்கேர்ஸ் சேர்க்கவேண்டும். - குளிர் நீர் மீன்களான ரியுனா, சமன், கெறிங் போன்றவற்றை உணவில் சேர்க்கவேண்டும். இவற்றில் மூளை விருத்திக்கு தேவையெனக் கருதப்படும் கட்டாய அமினோ அமிலங்களையும் (எசென்ஸ்சல் பற்ரி அசிட்), ‘டி.எச்.ஏ’யும்; போதியளவில் கொண்டுள்ளன. ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி நிலை கண்ட பிள்ளைகளில் இவற்றினளவு குறைவாகவே காணப்படுகின்றன. - உயர் புரதவளவு கொண்ட உணவைத் தொடரவும். உடலுக்கு வேண்டிய அமினோ அமிலங்கள், புரதத்திலிருந்து கிடைக்கின்றன. - போதியளவு மாச்சத்து உணவிலிருந்து கிடைப்பதாக கவனித்துக் கொள்ளுங்கள். சிக்கலான மாப்பொருள் (உ+ம் முழுத்தானியம் ) கொடுக்கப்படவேண்டும். முன் தயாரிக்கப்பட்ட உணவுகளும் எளிய காபோவைதரேற்று கொண்டவற்றையும் தவிர்க்கவும். சிக்கலான மாப்பொருட்கள் புதிதாக தருவிக்கப்பட்ட பழம், மரக்கறி வகைகள், அவரை வகைகள், தானிய வகைகள் ஆகியவற்றில் கிடைக்கின்றன. - பசுப்பால் உட்கொண்டதன் பின்னர் நடத்தை குழறுபடிகள் அவதானிக்கப்பட்டால், பால் தயாரிப்பக்களை உட்கொள்வதை மட்டுப்படுத்த வேண்டும். சில ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி நோய்நிலை கொண்டவர்களில் பசுப்பாலுணவுகள் நடத்தைக் குழறுபடிகளை உண்டாக்கியது அவதானிக்கப்பட்டுள்ளது. - எளிய வெல்லங்கiளான பழவெல்லம், குளுக்கோஸ், சீனிப்பாணி (சுகர் சிறப்ஸ்) உணவிலிருந்து முற்றாக அகற்றப்படவேண்டும். - எல்லா முன்தயார் செய்யப்பட்ட உணவுகளையும் செயற்கையான உணவு, வாசனையூட்டிகள் கலந்த உணவுகளையும், மொனோசோடியம் குலூற்ராமேற் சேர்த்து தயாரித்த உணவுகள், மதுவம் (புளிக்கவைக்கும் பொருள்) கொண்ட உணவுகள் யாவும் தவிர்க்கப்பட வேண்டும். - அப்பிள், சைடர் வினிகர், பேக்கன் (பன்றி இறைச்சி வார்), பட்டர், இனிப்பு, சொக்கலேற், நிறமூட்டப்பட்டபாற்கட்டி, மிளகாய் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு சுவையூட்டி (சோஸ்), சோளம், காம் (பதனிட்ட பன்றி இறைச்சி), கொட்டோக்ஸ், லஞ்சொன் மீற், மாஜரீன், பதனிட்ட இறைச்சி வகை, பசுப்பால், பன்றி இறைச்சி, சலாமி, உப்பு, சோயா சோஸ், சொசேச், தேநீர், கோதுமை ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். - வயிற்றில் சுரக்கும் அமில மிகுதியைச் சமப்படுத்தும் மருந்து (அன்ராசெட் மாத்திரைகள்), வாசனைத்திரவியம், தொண்டை இனிப்பு மருந்து அல்லது தரங்குறைந்த பற்பசை போன்றவற்றை பயன்படுத்தவேண்டாம். - தொலைகாட்சி, விடியோ விளையாட்டுக்கள் போன்ற இலத்திரனியல் கருவிகளுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து, வெளிக்கள ஆக்க செயற்பாடுகளில் நேரத்தை செலவு செய்யவேண்டும். இந்த ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி நிலைகளைக் குணப்படுத்தும் நோக்கில் வேலை செய்யும் பொழுதில், உணவு வயிற்றுக்கல்ல, மூளைக்கே என்னும் நோக்கில் செயற்படவேண்டும். நோயை விளைவிக்கும் ஏதுக்களை உணவிலிருந்து அகற்றி, தேவையான போசாக்கு குறைநிரப்பிகளை சேர்ப்பதன் மூலம், நோய்குறிகளில் பல அகன்று போவதையும், ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் பல தீங்கான பக்க விளைவுகள் ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி ஏற்ப்படுவதையும் தவிர்த்துக்கொள்ளலாம். குறை நிரப்பிகள் குறை நிரப்பிகள் - ஸ்பெக்றம் கொம்பிளீற் இது பிள்ளைகளுக்குத் தேவையான எல்லா ‘பி’ உயிர்ச்சத்துக்களையும், கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்களiயும், கனியுப்புக்களையும் கொண்டிருக்கின்றன. வேறுசில விசேட போசாக்குப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதிலடங்கியவற்றின் பட்டியல் கீழே வருமாறு: - நோயெதிர்ப்புத் தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான மூல பொருட்கள், உயிர்சத்துக்கள் சி, ஈ, சிங், செலேனியம், கோ என்சைம் கியூ10, பீற்ரா குலுக்கன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். - உயிர்ச்சத்து ஏ. - பீற்ரா கறோற்ட்ரின், லூரின், சீயசான்தன் - ‘அசற்ரைல்கோலீன்’ எனப்படும் நரம்புக்கணத்தாக்கங்களை கூட்டுவதற்குத் தேவையான இரசாயனங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் சோலின்னை கொண்டிருக்கிறது. - ஈரலுக்கு உதவியாக இனோசிற்ரோல், ரோறின், கிளைசின் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் இனோசிற்ரோல், நரம்பு, மூளை, தசை செயற்பாடுகளுக்கு முக்கியமானதாகும். ரோறின், கிளைசின் ஆகியன கணத்தாக்க கடத்திகளை பராமரிப்பதுடன் உடலை அமைதிப்படுத்துவதாவும் செயற்படுகிறது. - குலூகோசமின் - மொலிப்டினம் – கந்தக (சவ்பர்) ஆக்கச் சிதைவு செயற்பாடுகளுக்கும், ஆரோக்கியமான செப்பு (கொப்பர்) மட்டத்தை பேணுவதற்கும் தேவையானதாகும். - செலேனியம் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கு தேவைப்படுகின்றது. - டி.எம்.ஏ.ஈ. கவனத்தை குவிப்பதற்கு உதவுகிறது. - உயிர்ச்சத்து ‘பி12’ உயர் அளவுகளில் கிடைக்கிறது. குறைநிரப்பி - டைமெதைல்கிளைசின் (டி.எம்.ஜி): இதுவொரு தாவர, விலங்கு கலங்களில் காணப்படும் புரதமல்லாத அமினோ அமிலமாகும். இது பல கலமட்ட உயிரிரசாயன செய்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி நிலை கண்ட பிள்ளைகளின் பேச்சு, சமூக நடத்தை, கவனப்புலம் ஆகியவற்றன் மேன்மைக்குதவும் என கூறப்படுகிறது. குறைநிரப்பி - ரோரல் ஈ.எவ்.ஏ. யூனியர்: மேற்கு நாடுகளில்இ நாளாந்த உணவில் போதியளவு ஒமேகா 3 என்னும் கொழுப்பமிலம் கிடைப்பதில்லையென வல்லுனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் ஒமேகா 3 ஐ அதிகம் கொண்டிருக்கும் மீன், வோல்நட், கடும்பச்சை இலை மரக்கறி போன்றவற்றைப் போதியளவில் உண்பதில்லை. ஒமேகா 6 இன் இருவகைகளில் ஒமேகா 6 லினோலிக் என்னுமமிலம் போதியளவு கிடைத்தபொழுதிலும், ஒமேகா 6 காமா-லினோலிக் அசிட் (ஜி.எல்.ஏ) உணவில் கிடைப்பதில்லை. பதிலாக உடலானது உணவிலிருந்து கிடைக்கும் லினோலிக் அமிலத்திலிருந்து ‘(ஜி.எல்.ஏ’ஐ உடல் தயாரிக்கிறது. இந்த தயாரிக்கும் வல்லமையை மனவழுத்தம், தரக்குறைவான உணவு, மது, முதுமை, நோய் போன்ற காரணிகள் குறைத்தவிடுகின்றன. அத்தியாவசிய கொப்பமிலங்கள் (ஈ.எவ்.ஏ) கலமென்சவ்வின் முக்கிய பகுதிகளாகும். இவைதான் கலத்தில் இழுது நிலையைப் பேணுகின்றன. இவைதான் குருதிச் சுற்றோட்டசெயற்பாடு, மூளை - ஞாபக செயற்பாடு, மூளை – நரம்புத்தொகுதி செயற்பாடு, கொழுப்புச் ஆக்கச்சிதைவு செயற்பாடு, தோலாரோக்கியம், மூட்டுககளின் அசைதிறன், உடலில் வீக்கம் ஏற்படுத்தும் நிலை (இன்பிளமேசன்) போன்றவற்றின் இரசாயனத் தூதர்களான புறொஸ்ரகிளன்டின்ஸின் கட்டமைப்புக் கூறாகும். குறைநிரப்பி – அனிமல் பறேட்: அனிமல் பறேட் என்பது ஏ.டி.டி நிலை கண்ட பிள்ளைகளுக்கான பாதுகாப்பையும் வேண்டிய போசாக்கையும் கொண்டதொரு கலவையாகும். பிள்ளைகள் விரும்பக் கூடிய சுவையுடன், விலங்குகளின் தோற்றங்களையும் கொண்டமைந்த இந்த குறைநிரப்பி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கென வேண்டித் தேடுவதைக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் இன்றைய எமது குழந்தைகளின் உணவில் பெருமளவில் மாப்பொருள் நிரப்பட்டு இருக்கிறதேயன்றி, அவசியமான போசாக்குப் பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஒவ்வொரு சப்பி சாப்பிடக்கூடிய மாத்திரையிலும் 16 உயிர்ச்சத்துக்கள், 8 கனியுப்புக்களுடன் இயற்கையில் கிடைக்கும் மிகவும் ஆரோக்கியம் தரவல்ல முழுவுணவுகளான ஸ்பிறிலினா, கறட், புறக்கோலி, முழு சிவப்பு அரிசி, ஸ்பினச் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இயற்கையில் கிடைக்கும் நல்ல முழு உணவுகளுடன், போசாக்குப் பொருட்கள் தேவைக்கு வேண்டிய அளவில் உள்ளடக்கப்படுவதனால் இதுவொரு பிள்ளையின் தேவையான முழுமையான உணவுக் குறைநிரப்பியாகும். மூலிகை மருந்து – காம் அன்ட் கிளயர்: இது ஒருவருக்கு தனக்கென ஒரு நேரத்தை ஏற்படுத்திஇ வெளிப்புற அழுத்தங்களிலிருந்து விடுவித்து, மனச்சுமையை இறக்கி வைத்து, ஆறுதலாக உடலை, மனதை அமைதிப்படுத்தி தெளிவாக இருப்பதற்கு வேண்டியதாகும். மூலிகை மருந்து – கொக்னிஸ்: இது செய்யும் காரியங்கள், வேலை செய்தல், வாசித்தல், பேசுதல், கற்றல் போன்ற எதுவானாலும் அதில் தெளிவையும், கவனத்தை மையப்படுத்தவும் உதவுகின்றது. இது உள்ளுணர்விற்கும், புலனறிவிற்குமான சமநிலையைப் பேணி புதிய சிந்தனைகளை அல்லது உத்திகளை தரவுகளுடன் இணைக்க உதவுகின்றது. தீவிரமாக எண்ணத்தை குவித்துச் செயற்படவேண்டிய கற்கை நெறிகளிலுள்ளோருக்கு மிகவும் நல்லது. முன்னைய நிகழ்ச்சிகளின் நினைவையும் அனுபவத்தையும் வைத்திருக்கும் உள்ளுணர்வினை இலகுவில் புரட்டிப்பார்ப்பதன் மூலம் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க கூடியதாகவுள்ளது. மூலிகைக் கலவை – பக்கோபா அன்ட் கொட்ரூகொல கொம்பிளக்ஸ்: மூலிகை – பக்கோபா (பக்கோபா மோனெறி) இது நரம்பு மண்டலத்தை ஆறுதல் படுத்துவதன் மூலம், பதகளிப்பையும் மனவருத்தத்தையும் தணிக்க செய்யுமொரு மூலிகை என்பது நன்கு அறியப்பட்டதேயாகும். ஆயுர்வேத வைத்தியத்தில், புலனறிவு, ஞாபகசக்தி போன்றவற்றிற்கான அருமருந்தாக போற்றப்படுகிறது. ஞாபகமறதி காரணமான பதகளிப்பு, மனவருத்தத்திற்கு பக்கோபா சிறந்த மருந்தாகும். ஞாபகசக்தியை மீளப்பெற்று பின் அதை நிலைநிறுத்தி வைத்திருக்க பக்கோபா மூலிகையால் உதவ முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கண்களால் உள்வாங்கப்படும் பார்வைப்புல கணத்தாக்கங்களை வேகமாக மூளையில் தரவு நிரற்படுத்தவும், பயின்திறன் அதிகரிப்பதாகவும், குறுகியகால ஞாபகத்தை நீண்டகால ஞாபகமாக மாற்றுவதிலும் பக்கோபா மூலிகையை நன்கு செயற்பட்டதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதுவொரு சக்திவாய்ந்த ஒட்சியேற்றத்தைத் தடுக்கும் காரணி (அன்ரி ஒக்சிடன்ற்) ஆக செயற்படுவதனால் மூளையின் ஞாபக நிலையத்தைப் பாதுகாப்பதோடு, மூளையிலேற்படும் மனவழுத்தத்தையும் குறைக்கிறது. மூலிகை – கொட்ரூக்கொல (சென்ரெலா ஏசியாற்ரிக்கா): இதுவொரு, ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட நாளாக புத்திக் கூர்மையை உயர்த்துவதாகவும், வலது இடது பக்க மூளையின் செயற்பாட்டை சமன் செய்வதாகவும் செயற்படுகிறது. வல்லாரை ஞாபசக்தியை திறம்பட வேலை செய்யச்செய்து, பயின்திறனை மேம்பட செய்வதோடு, இழந்த ஞாபகசக்தியை மீளப்பெறுவதற்கும் உதவும் ஒரு மூலிகையாகும். மருத்துவ ஆய்வொன்றில் பயின்திறன் குறைபாடுடைய 30 பிள்ளைகளுக்கு, 12 கிழமைகளுக்கு கொட்ரூக்கொல கொடுத்துவந்ததன் பின் அவர்களின் கவனிக்கும் அல்லது கிரகிக்கும் திறனிலும் கவனத்தை ஒருமுகப்படுத்தலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. கொட்ரூக்கொலவில் பி-உயிர்ச்சத்து கூட்டு (விற்றமின் ‘பி’ கெம்பிளக்ஸ்) அதிகளவில் உண்டு. பி-1 தயாமின், பி-2 றைபோபிளேவின், பி-6 பைறிடொக்சின் ஆகியன இதில் உள்ளடங்கும். நரம்புத் தொகுதியின் சாதாரண செயற்பாடுகளுக்கு, பி- உயிர்ச்சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகும். நரம்புத் தொகுதியின் செயற்பாடுகள் செவ்வனே நடைபெறும் பொழுது மூளையின் ஒழுங்குபடுத்தும் செயற்திறன் திறம்பட நடைபெற ஊக்குவிக்கும். கொட்ரூக்கொலவில் அமைதிப்படுத்தும் தன்மை காணப்படுவதால் அதிகமாக அங்கலாய்க்கும் பொழுதிலும் நரம்புத் தொகுதி மேலதிகமாக வேலை செய்யும் பொழுதிலும் உபயோகப்படக்கூடும் எனக்கருதப்படுகிறது. மூலிகை – அஸ்வகந்தா ( வித்தானியா சோம்னிபெறா): இதன் வேரில் வித்தானோலைட் என்னும் இரசாயன வகுப்பைச் சேர்ந்த பல செயற்திறன் கொண்ட மூலப்பொருட்களும் பிளேவனொயிட்ஸ் பதார்த்தங்களும் காணப்படுகின்றன. இவை குறிப்பிடத்தக்க அளவில் ஒட்சியேற்றத்தைத் தடுப்பதாகவும், அறிதிறனை அதிகரிப்பதாகவும் செயற்பாடுகளை மேம்படுத்துவதாகவும் செயற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அஸ்வகந்தா நரம்புத் தொகுதியை அமைதிப்படுத்தி, இளமையூட்டி, வலிமையாக்கி, செவ்வனே செயற்படவைக்கிறது. அத்துடன் மனவழுத்ததிற்கு எதிராகவும், நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படவும் செயற்படக் கூடுமாதலால், குறுகிய கால, நீண்ட கால ஞாபக சக்தியை அதிகரிக்கவும், உடலின் நோயெதிர்ப்பையும் அதிகரிக்கக்கூடும். இது அரிதினல் சுரப்பியை ஊக்குவிக்கும் தன்மையுடைதாதலால் சோர்ந்த நரம்புத் தொகுதி செயற்பட முடியாமல் போகும் நிலையையும் போக்க உதவக்கூடும். மூலிகை – வேர்வைன் (வேர்பேனா ஒவ்வீசினாலிஸ்): இதுவொரு நரம்புத் தொகுதியை பொதுவில் ஊட்டம் பெறச் செய்யக் கூடிய மூலிகையாகும். நரம்புத் தொகுதியின் பொதுவான சோர்வு நிலையைப் போக்கவும், மனச்சோர்வு, மனவழுத்தம் போன்ற நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் இது மனச்சோர்வு நிலைக்கு மட்டுமல்லாமல், ஈரலிலிருந்து நஞ்சகற்றலிலும் நன்மைபயக்கும். என்ன எதிர்பார்க்கக்கூடும்? சில பிள்ளைகள் ‘ஏ.டி.எச்.டி’யிலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள். ஆனால் சிலரோ வாலிபம், அதற்கப்பாலும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஏ.டி.எச்.டி கண்ட 5 இல் 2 பிள்ளைகள் தமது 18 வயதுவரை இதன் தாக்கத்திற்குள்ளாகிறார்கள்.’ஏ.டி.எச்.டி’ இன் பிரதான நோய்குறியான கவனக்குறைவு நிலையானது, பிள்ளைகளின்; வயது வளர்ச்சியுடன் திருந்திப் போனாலும், ஏனைய நடத்தைப் பிரச்சினைகளான கீழ்படியாமை, கடும்கோபம் போன்றன, பிள்ளைகளுக்கு நோய் நிலையை குணப்படுத்த உதவி கிடையாத பொழுது இன்னும் மோசமாகிப் போகக் கூடும். குறிப்பாக, மோசமான குழப்படியான, மிகுந்த கோபங்கொள்ளும் ஆண்பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளினிடத்து நன்மதிப்பைப் பெறுவதில்லை என ஆய்வுகள் காட்டுகின்றன. இந்நிலையில் மிகவும் ஆரம்பத்திலேயே இப்பிள்ளைகள் உதவியைப் பெறுவது இந்நிலையை தவிர்த்துக்கொள்ளவும், வேறு நடத்தைக் குழறுபடிகள் தோன்றாவண்ணமும் பார்த்துக்கொள்ளலாம். ஏ.டி.எச்.டி கொண்டவர்களில் 30 சதவீதம் - 40 சதவீதம் மானோர். வாலிபப் பருவத்திற்கு வரும்பொழுது நோய் நிலையின்றி நன்றாகவே நடந்து கொள்கிறார்கள். இந்த சதவீதம், இவர்களுக்கு ஆரம்பத்திலேயே உதவி கிடைத்திருந்தால் உயர்வடையும். ஆனால் ஏ.டி.எச்.டி நிலை கொண்ட பிள்ளைகள் பாடசாலைக் காலத்திலேயே கடுங்கோமும் சமூகத்திற்கொவ்வாத நடத்தையும் கொண்டவர்களாக கண்டு கொள்ளப்பட்டு ‘இவர்கள் பொருந்தாதவர்கள்’ எனக் குறிக்கப்படும் பொழுது, இவர்களின் வாலிபப்பருவம் பிரச்சினைகளுக்குள்ளாகும் அபாயமுண்டு. குடும்பமும் பாடசாலைகளும் இவர்களின் நிலையறிந்து ஆதரவும் உதவியும் தரவேண்டும். ஏ.டி.டி அல்லது ஏ.டி.எச்.டி நிலைகொண்ட பிள்ளைகளின் பெற்றோர், இவர்களின் நடத்தையால் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகிறார்கள். இப்பெற்றோர் பாராட்டப்படவேண்டியவர்கள். பிள்ளைகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஏனெனில் இவர்களும் தம்மால் கட்டுப்படுத்த முடியாதவொரு உடற்தொழிரியல் செயற்பாட்டு குறைபாட்டுடன் போராடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இப்பிள்ளைகள், தாமும் நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என விரும்பிய பொழுதும் அவர்களின் சிந்தனை கட்டுப்பாடின்றி அலைபாய்கிறது. இதனால் குழம்பிய அவர்கள் தமது காரியம்பற்றி வெட்கப்படுகிறார்கள், காலப்போக்கில் தம்மைப்பற்றி தாழ்வெண்ணம் கொண்டவர்களாக தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள். பிரச்சனைகள் எழும்பொழுது, என்ன, எப்படி, ஏன் நடந்தது என்பதனை தெளிவாக அமைதியாக நேருக்கு நேராக தெளிவுபடுத்தி விளங்கவைக்கவேண்டும். இப்பிள்ளைகளுக்கு பெருமளவில் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் ஊக்கமும் சூழ்ந்தவர்களால் கிடைக்கவேண்டும். இவர்கள் யாவரிலும் முக்கியமாக பெற்றோரிலிருந்து கிடைக்கவேண்டும்.



    back



    உதவி
    செய்திகள்
    • Gokshura & Ashwaganda Plus...
      Added :2009-12-05 09:21:00
      கோக்சுரா & அஸ்வகந்தா பிளஸ் (Gokshura & Ashwaganda Plus) .....
      மேலும்
    • புதிய ஆரோக்கிய வாழ...
      Added :2008-08-16 09:36:43
      புதிய ஆரோக்கிய வாழ்வு 2009 வெளி வந்து வி.....
      மேலும்
    • இனிய புத்தாண்டு வா...
      Added :2008-04-12 07:59:56
      மருந்து.கொம் உங்கள் அனைவருக்கும் இனி.....
      மேலும்
    • புதிய ஆரோக்கிய வாழ...
      Added :2008-02-28 22:45:28
      புதிய ஆரோக்கிய வாழ்வு 2008 வெளி வந்து வி.....
      மேலும்
    மேலதிக செய்திகள்
    வீடியோ காட்சிகள்
          
    மேலதிக காட்சிகள்
    பதிவு செய்க
    • பெயர்
    • மின்னஞ்சல்


    விளம்பரம்


    சில பிரபலமான தயாரிப்புக்கள்
    பிறீலொக்ஸ்....
    பிறீலொக்ஸ் (Prelox ) ஒரு தயாரிப்பு உரிமை ப..
    மேலும்
    £ 29.75

    UK postage is free but for outside uk please contact us for correct postage

    பாமாநோட் றீவைற்ரல....
    பாமாநோட்: கியூ10 றீவைற்ரலைசிங் கிறீம் ..
    மேலும்
    £ 12.75

    UK postage is free but for outside uk please contact us for correct postage

    நெற்ரி பொட் (மூக்க....
    நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்): ..
    மேலும்
    £ 13.99

    UK postage is free but for outside uk please contact us for correct postage

    பச் இற்- தயாரிப்பு....
    உடலில் நஞ்சகற்றும் பற்று - ‘பச் இற்’ த..
    மேலும்
    £ 12.70

    UK postage is free but for outside uk please contact us for correct postage

    மேலதிக தயாரிப்புக்கள்