info@marunthu.com
0044 (0) 208 664 8720
  • மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

    மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

  • மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்
    மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்
  •  மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

     மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

Peptic Ulcers -வயிற்று புண்

 Peptic Ulcers -வயிற்று புண்

வயிற்று புண் என்றால் என்ன ? எங்கு ஏற்படுகிறது?

வயிற்று புண் என்றால் வயிற்றில்/சிறுகுடலில்/ அடியில் உள்ள திசுக்களில் காணப்படும் உள்திரைகளில் உராய்வு போன்ற புண் காணப்படுதலாகும். சுற்றியுள்ள திசுக்கள் வழமைக்கு மாறாக வீங்கியும் எரிச்சலூட்டும் தன்மையையும் கொண்டிருக்கும். வயிற்று புண் சமிபாட்டுத் தொகுதியிலுள்ள எந்த பகுதியிலும் ஏற்படலாம் ஆனால் பொதுவாக இரைப்பையிலும் (gastric ulcers - இரைப்பை புண்), சிறுகுடல் மேற்பகுதியிலும் அதாவது வயிறு நெருக்கமாகவிருக்கும் சிறு குடல் பகுதியில் (duodenal ulcers - சிறுகுடல் மேற்பகுதி புண்) ஏற்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

நீண்ட கால எரிவு, அரிக்கும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உணவருந்திய பின் அல்லது இரவில் பொதுவாக 55-60 நிமிடங்கள் வரை இவை ஏற்படலாம். உணவு, அமில எதிர்ப்பிகள் பாவித்தல், வாந்தி, அதிகமான நீர் அருந்துதல் ஆகியன இவ் எரிச்சல்களை/வலிகளை தணிக்க உதவுகின்றன. இந்த வலிகள் இலேசாக தொடங்கி கடிமையான வலியையும் ஏற்படுத்தலாம். மேற் குறிப்பிட்டது மட்டுமன்றி வேறு சில அறிகுறிகளுமுள்ளது.
உதாரணமாக- கீழ் முதுகு வலி ஏற்படல், உணர்ச்சிவசமடைதல், மூச்சு திணறல், தலைவலி, கடிக்கும் தன்மை, குமட்டல்/வாந்தி

ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

நொதியங்களின் விளைவுகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கு வயிற்றில் உள்ள அகவரைகளுக்கு இயலாது போகும் சந்தர்ப்பத்திலும் வயிற்று புண் ஏற்படக்கூடும். இவ்வாறே அமிலங்கள் இரப்பையையும் புண்ணாக்கிவிடுகின்றன.

சிலர் பதட்டமும், மன அழுத்தமுமே வயிற்று புண் வருவதற்கு முக்கிய காரணங்கள் என நப்பினார்கள் . எவ்வாறாயினும் காலப்போக்கில் அவ் நம்பிக்கையை முறையடித்து வயிற்றில் இருக்கும் அமிலத்துடன் ஹெலிகோபாக்டர் பாக்டீரியாக்களும் இணைந்தே வயிற்று புண்ணை ஏற்படுத்துகிறது என அத்தாச்சிகள் எடுத்துக்காட்டுகின்றது. ஜீரண அமிலதிலிருந்து பாதுகாக்கின்ற சீத படலத்தையும், அகதிரையையும் சேதப்படுத்துகின்ற ஹெலிகோபாக்டர் பாக்டீரியா வயிற்றிலோ அல்லது சிறுகுடலிலோ வசிக்க முடியும்.
 
பல உடல் நல பரிந்துரையாளர்கள் இவ் பாக்டீரியா ஒருவரிலிருந்து எனொருவருக்கு அதாவது நெருக்கமான உறவுமுறைகளின் (close contact) மூலம் தொத்துகிறது என நம்புகிறார்கள். எவ்வாறாயினும் இன்னமும் சில உடல் நல பரிந்துரையாளர்கள் மனவழுத்தம் கூடும் போது வயிற்றமிலமும் அதிகரிக்கிறது அதனாலேயே வயிற்று புண் ஏற்படுகிறது என்கின்றனர்.
சில மருந்து தூள்களும், குறைநிரப்பிகளும் அமில உற்பத்தியை அதிகரிகின்றனர். அஸ்பிரின் எடுத்தல், நான்ஸ்டீராய்டல் அன்றிஇன்பிலமற்றரி போன்ற வலி நிவாரணிகளின் பாவனை (முக்கியமாக நீண்டகால பாவனை) வயிற்று அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று புண்ககளை உருவாக்கின்றது. கீல்வாதம் போன்ற நோய்களுக்கு பாவிக்கும் ஸ்டீராய்டுகள் (steroids) மருந்துகளும் இதற்கு காரணமாக அமையலாம். பரம்பரையில் இந் நோய் காணப்படுமாயின் அது வயிற்று புண்ணுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்யும். புகைப்பிடிப்பவர்களுக்கு வயிற்று புண் அதிகம் விருத்தியடைவதுடன் குணப்படுத்துவதும் மிகவும் கடினமாகும்.அது போன்று மது அருந்துபவர்களுக்கும் இது ஏற்படலாம். வயிற்று புண்கள் அக இரத்த கசிவு, வயிற்று/சிறுகுடல் குத்து ஆகியவற்றை உருவாக்கும்.

மூலிகை வைத்தியம்

இந் நோய்க்கான மூலிகை மருந்து தேவைப்படுமாயின் எங்கள் மூலிகை மருத்துவரை நாடுங்கள் உங்களது நிலைகளை பரிசோதித்து /அறிந்து அதற்கேற்றவாறு மருந்துகள் பரிந்துறைக்கப்படும்.

பிரிவுகள்

கட்டுரைகள்

தலைப் பகுதி > ஒற்றைத்தலைவலி - மைகிறேன்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

Download Article


மலச்சிக்கல் தீர...

மலச்சிக்கல் என்பது பொதுவாக பலரையும் வயது வேறுபாடின்றி பாதிக்கும் ஒரு நில

Download Article


தொடர்பு கொள்க

Name 
Telephone 
E-mail 
    

Subscribe

வீடியோ காட்சிகள்


Marunthu Articles