info@marunthu.com
0044 (0) 208 664 8720
  • மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

    மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

  • மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்
    மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்
  •  மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

     மருந்து.கொம் - நோய் அற்ற வாழ்வே குறை அற்ற செல்வம்

வாய் துர்நாற்றம் - மருந்து.கொம்

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-04

(வாய் துர்நாற்றம்)

கேள்வி:

எனக்கு 29 வயதாகிறது (பெண்). கடந்த 4 – 5 வருடங்களாக வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கே தயக்கமாகவிருக்கிறது. சில சமயங்களில் முரசிலிருந்து இரத்தம் வருகிறது. என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் சகிக்க முடியாத நாற்றம் காரணமாக முகந் சுழித்து விலகிப்போகும் பொழுது இறந்துவிடுவதே மேல் என்னும் ஓர் உணர்வு – தயவு செய்து ஏதாவது வழி சொல்வீர்க்ளா?


பதில்:

வாய் துர்நாற்றமடிப்பது பலருக்கு அவ்வப்பொழுது வந்து போவதாக இருந்தாலும், நிரந்தரமாகவும், மீண்டுவருவதாக இருப்பதுதான் மற்றவர்களுடன் பேசும்பொழுது அசௌகரியமமான நிலையை ஏற்படுத்துகின்றது. வாய் நாற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை இலகுவாகவும் இயற்கையான முறையிலும் தீர்த்துவிடலாம்.

சுத்தமான வாய்க்குழியைப் பேணுவதே வாய் நாற்றத்தை தவிர்ப்பதற்கான முதற்படியாகும். வுhய்க்குழியிலமைந்த பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். உணவின் சிறு துண்டுகள் தங்கும் பொழுது அதில் பற்றீரியா தாக்கமேற்பட்டு சிதைவடையும் பொழுது துர்நாற்றம் வரும் வாய்ப்புண்டு. தினமும் இரு வேளை நன்கு பல் துலக்கியினால் நன்றாக துலக்கி சுத்தம் செய்வதோடு, நாவையும் (மென்மையான பல் துலக்கியினால்) வழித்து விட வேண்டும். நாளுக்கு ஒரு தடவையாதல் நாவை வழித்துவிட வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்பும் பல்துலக்குவது மிகவும் நன்மைபயக்கும். ஆனால் இது நடைமுறைச்சாத்தியம் குறைந்ததாகையால் வாய் நிறைய தண்ணீரை எடுத்து நன்றாக அலசி கொப்பளித்துவிடலாம்.

புல் துலக்கியை இரு மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றவேண்டும். செயற்கை பல் வரிசையை பயன்படுத்துபவராக இருந்தால், அவற்றை கிரமமாக, நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும். கரட், அப்பிள், சிலறி போன்றன பற்களில் ஏற்படக்கூடிய படிவுகளை தடுக்கவல்லன.

வருடத்திற்கு இரு தடவையாதல், பல் வைத்தியரைக் கொண்டு பற்களை சுத்தம் செய்வதோடு, பற்களின் ஆரோக்கிய நிலையினையும் தெரிந்து கொள்ளவேண்டும். முரசிலிருந்து இரத்தம் வடிவதாக இருந்தால், அது வாய் நாற்றத்திற்கு காரணமாக இருப்பதோடு பற்சூத்தை, பற்களுக்கடியான கட்டிக்கும் காரணமாகிறது.

சில உணவுகளும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம். உள்ளி, வெங்காயம், புளு சீஸ், காரமான, வாசனைத் திரவியம் சேர்த்த இறைச்சிக் கறிவகைகள், சில வகை மீன்கள், மதுபானங்கள், பியர். வயின், விஸ்கி, கோப்பி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சில நோய் நிலைக்கான மருந்துகளும், சமிபாட்டுக் குழறுபடிகளும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம்.

இந்நிலைக்குப் பயன்படக் கூடிய சில:

பேர்பெறிஸ் பிளஸ் - மூலிகைச் சேர்மானம் - சமிபாட்டை ஊக்குவித்து, உணவுத் தொகுதி கழிவகற்றலை மேம்படுத்துகிறது. பெப்பமின்ற் ஒயில் - 10 துளிகளை 100மி.லீ நீரில் கலந்து வாயை அலசி கொப்பளிக்கப் பயன்படுத்தலாம்.

வி.எம்-75 குறைநிரப்பி வேண்டிய உயிர்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதனால் (விற்றமின் ‘பி’) நரம்புத் தொகுதிக்கு ஊக்கம் கொடுப்பதாக செயற்படுகிறது.

பயோ குயிநோன் 10 – முரசை வலுப்படுத்துதோடு. இரத்தக் கசிவையும் குறைக்கவல்லது.

பிரிவுகள்

கட்டுரைகள்

தலைப் பகுதி > ஒற்றைத்தலைவலி - மைகிறேன்

கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய்க்குறிப்பு கடுமையான ஒற்றைத் தலைவலி நோயாளியின் நோய

Download Article


மலச்சிக்கல் தீர...

மலச்சிக்கல் என்பது பொதுவாக பலரையும் வயது வேறுபாடின்றி பாதிக்கும் ஒரு நில

Download Article


தொடர்பு கொள்க

Name 
Telephone 
E-mail 
    

Subscribe

வீடியோ காட்சிகள்


Marunthu Articles