பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

வீடும் தோட்டமும்

வீடு

வீடு எனப்படுவது தனி ஒருவர் அல்லது குடும்பம் அல்லது சிலர் சேர்ந்து வாழுமிடமாகும். இவ்விடத்தை ஒருவர் தனதுடமைகளை பாதுகாப்பாக வைத்து எடுப்பதற்கு, நித்திரை செய்வதற்கு, முக்கியமாக உணவு தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது சுகாதார வசதிகளையும் கொண்டிருக்கும். வீடொன்று மேற் குறிப்பிட்டவற்றுக்கும் அப்பால், பாதுகாப்பையும், அடைக்கலத்தையும் தருமிடமாகும். எல்லோருமே உலகியல் தேவைகளிற்காக தேடி ஓடிய பின் நாள் முடிவில் ஓய்வுக்கும், உணவிற்கும், உறக்கத்திற்குமாக வீட்டை (தங்குமிடம்) நோக்கியே ஓடுகின்றோம். சிலர் தாம் வாழ்ந்து வளர்ந்த இடத்தையும், வேறு சிலர் வாழ்ந்த காலத்தையும் வீடு எனக் கருதுகிறார்கள். எல்லாவற்றையும் தொகுத்து பார்க்கும் பொழுது, மனிதருக்கு வீடொன்றானது, ஆரோக்கியத்திற்கும், அமைதிக்கும், ஓய்விற்கும், உறக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும், அங்கத்தினரின் ஒத்துழைப்பிற்கும், ஒற்றுமைக்குமான ஓரிடமாகும். இவ்வழியில் நோக்கும் பொழுது குடும்பம் ஒரு ஆலயமாகவும், பல்கலைக்கழகமாகவும் அமைந்துவிடுகிறது. குழந்தை ஒன்றின் மிகவும் ஆரம்பகாலம், வீடொன்றில் வாழும் ஒரு குடும்பத்திலேயே ஆரம்பிக்கின்றது. வீட்டுச் சூழலைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியமும், உடல் மன நிலைகளும் அமைந்துவிடுகிறது. அறியாப்பருவக் குழந்தையைக் அறிவுறுத்தி, உணவூட்டி வளர்ப்பதுவும், வயது முதிர்ந்தோரையும். நோயுற்றோரையும் கவனிப்பதும், இந்த வீட்டிலேயேதான் நடைபெறுகின்றது. மனிதர்கள் பொதுவில் பழக்கத்திற்கு அடிமையானவர்களாதலால், ஒருவரின் வீடானது ஒருவரின் மன உணர்வுகளிலும், நடத்தையிலும் பெருமளவு ஆதிக்கம் செய்வதனால், அவரின் உள ஆரோக்கியத்தில் பெரும்பங்கை வகிக்கிறது. நல்லதோர் வீடமைந்தால் ஒருவரின் ஆரோக்கியம் நன்கு அமையும்.

தோட்டம்:

இயற்கைத் தாவரங்களையும், ஏனைய இயற்கையின் வனப்புக்களையும் காண்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் தோட்டமாகும். பொதுவாக இது வீட்டிற்கு வெளிப்புறம் அமைந்ததாகும். பல வேறுவகையான தோட்டங்கள் அமைந்த பொழுதிலும் வீட்டுத் தோட்டம் பலராலும் செய்யப்படுகின்றது. மலர் தரும் செடி, கொடிகளையும், உணவுக்கான பயிர்களையும், வாசைனை தரும் செடிகளையும், மூலிகைகளையும் வீட்டு தோட்டங்களில் வளர்கிறார்கள். இட நெருக்கடியான இடங்களில் உள் வீட்டுத் தோட்டங்களும், பூச்சாடித் தோட்டங்களும், வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும் கிறீன்கவுஸ் தோட்டங்களும், வீட்டு கூரையிலமைந்த தோட்டம், இன்னும் பல வகையாகவும் தோட்டமமைக்கப்படுகின்றன.

பயிர் கொடிகள், தாவரங்கள், மூலிகைகள் பயிரிடப்படும் தோட்டம் ஒன்றை அமைத்தலும், அதனைப் பேணுதலும் தோட்டம் செய்தல் எனக் குறிக்கப்படுகிறது. அழகியல் கலையாகவும், பயன்தரு பயிர்களை வளர்க்கவும், தோட்டம் செய்தல் பார்க்கப்படுகிறது. தோட்டம் செய்தல் மனதிற்கு அமைதியைத் தருகிறது. பல சிந்தனைகளில் சிக்கிக்கிடக்கும் மூளையை, செய்யும் காரியத்தில் (ஓரிடத்தில்) குவியச் செய்ய உதவுகிறது. வெளித்தோட்டம் செய்பவர்களுக்கு உடல் அப்பியாசமாகவும், மூலிகைத் தோட்டமாகவும் அமைகிறது.