பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

மருத்துவ சிகிச்சை

மருந்து.கொம் ~ மருத்துவ சிகிச்சை

பெருங்குடலை கழுவிச் சுத்தம் செய்யும் சிகிச்சை முறை
(கொலோனிக் கைற்றோ திறப்பி)

கொலோனிக் கைற்றோ திறப்பி என்பது பெருங்குடலை கழுவிச் சுத்தம் செய்யும் முறையாகும். 5 அடி நீளமான பெருங்குடலை கிருமி நீக்கம் செய்யப்பட்ட உபகரணங்கள் கொண்டு, சுத்தமான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட நீரை ஆசன வாயிலூடாக உட்செலுத்தி, பெருங்குடலை பகுதி பகுதியாக கழுவி, அங்கு தங்கியிருக்கக் கூடிய நஞ்சுகள், மலக்கழிவுகள், வாயுக் கழிவுகளை வெளியகற்றும் முறையாகும்.

சமிபாடடைந்த உணவு சிறுகுடலினூடாக செல்லும் பொழுது உடலிற்கு தேவையானவை அகத்துறிஞ்சப்பட்ட பின், பெருங்குடலினுள் தள்ளப்படுகின்றது. பாய நிலையில் பெருங்குடலினுள் வரும் சாப்பாட்டுக் கழிவிலிருந்து, நீரும் உயிர்ச்சத்துக்களும் தாதுப்பொருட்களும் மீளவும் அகத்துறிஞ்சப்பட, உடலின் தேவைக்கு மிஞ்சியவையும், நஞ்சுகளும், உடலுக்கு வேண்டாதவையும் கழிவாக(மலம்) குதத்தினூடாக வெளியேற்றப்படும். பெருங்குடல் செவ்வனே செயற்படாது போனால் வெளியகற்றல் தடைப்பட, அகத்துறிஞ்சல் நிறுத்தப்பட, பல நோய் நிலைகள் (மலச்சிக்கல், சில சமயம் குடற் புற்று நோய், டைவேடிக் குலையிற்ரிஸ், கெமறொயிட்ஸ், கொலற்ரிஸ்) தோன்றுவதற்கு காரணமாகலாம். அகற்றப்படாத கழிவுகள் உடலுக்கு நஞ்சாகின்றது. இந்த நஞ்சானது நித்திரை குழறுபடிகள், மனச்சோர்வு, விரக்தி, மனக்குழப்பம், தோல் வியாதிகள், மார்புப் புற்றுநோய், சிறுநீர்;ப் பை தொற்று, தலையிடி போன்றவற்றுடன் கூட பல சமிபாடு சம்பந்தமான நோய்களுக்கும் காரணமாகின்றது.

இந்த சிகிச்சை முறையை செய்வதன் மூலம் பின்வரும் நோய் நிலைகளுக்கு தீர்வு காணலாம்.

– வயிறு ஊதல்

– கன்டிடா பங்கசு தொற்று

– மலச்சிக்கல்

– வயிற்றோட்டம்

– அபான வாயு போக்கு (அதிகம்)

– தலையிடி

– சமியாக்குணம்

– சளிக்கட்டு

– ஒட்டுண்ணி கிருமித் தொற்று

– எக்சிமா

– சொறாசிஸ்

– அக்னி

– அவசரமாக சிறுநீர் கழிக்க வருதல் (பெண்களுக்கு)

– கொலற்ரிஸ்

– டைவேட்ரி கொலோசிஸ்

– கெமறொயிட்ஸ்

– குடல் ஒழுக்கு

குடல் தொகுதியானது மழுமழுப்பான தசைகளாலானது. இத்தசைகள் சுயவியக்க நரம்புக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றன. அதாவது நாம் விரும்பி இத்தசைகளை இயக்க முடியாது. அவை தமது செயற்பாட்டினை இயல்பாக செய்து முடிக்கும். சாதாரணமாக, 24 மணித்தியாலங்களுக்கு 1 தடவை ஒரு பகுதி மலம் கழிக்கப்படவேண்டும். மலம் கழிக்கப்படாது போனால் மலசிக்கலும், அடிக்கடி கழிக்கபட்டால் வயிற்றுப் போக்கும் ஏற்ப்படுகின்றது. இந்நிலை ஐ.பி.எஸ் (இரிட்ரபிள் பபிள் சிம்றம்) என அழைக்கப்படுகின்றது. கூடவே வயிற்றுப் பொருமல், ஒழுங்கற்ற மலக்கழிப்பு, முழுமையான மலம் கழிக்காமல் போதல் போன்ற நிலைகளும் காணப்படுகின்றன. மேலே குறிக்கப்பட்ட காரணங்களாக மட்டும் அன்றி ஏனைய கழிவகற்றும் அங்கங்களான சிறுநீரகம், தோல், ஈரல் போன்றவற்றின் வேலைப்பழுவை குறைப்பதற்காகவும் குடலின் செயற்பாடுகள் நல்ல நிலையின் பேணப்படவேண்டும்.

பெருங்குடலை கழுவிச் சுத்தம் செய்யும் சிகிச்சை முறையைச் செய்வதன் மூலம் குடலிலிருந்து நஞ்சகற்றப்படுவதோடு, குடல் நன்றாக செயற்பட தூண்டப்படுகின்றது. தோல் கழிவுகளும் அகற்றப்பட மினுமினுப்பான தோல் கிடைக்கின்றது. தலையிடி இல்லாமல் தெளிவாக சிந்திக்க முடிகின்றது. குருதிச் சுற்றோட்டம், நோயெதிர்ப்புச் சக்தி, உடல் நிறைக் கட்டுப்பாடு ஆகியன மேம்படுகின்றன.

இந்த சிகிச்சை முறைக்கு விசேடமான ஆயத்தங்கள் எதுவும் தேவையில்லை. ஆயினும் அதிகளவு உணவோ, பானங்களோ சிகிச்சைக்கு முன்பு எடுக்காமல் இருந்தால் சிகிச்சை இலகுவாக இருக்கும். சிகிச்சையின் பொழுது சிகிச்சையாளர் ஆரம்பத்தில் உங்களின் ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு பதிவு செய்து கொள்வார். சில சமயங்களில், சில நோய் நிலைகள் இருக்கும் பொழுது இச்சிகிச்சை முறையை செய்ய முடியாது. சிகிச்சையின் பொழுது சிகிச்சையாளர், மென்மையாக்கப்பட்ட வெப்பநிலை, அமுக்கம் ஆகியன கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படும் நீரை ஒரு குழாய் ஊடு குதத் துவாரத்தினூடு உட்செலுத்தி, இன்னோர் குழாய் மூலம் கழிவுகள் வெளியகற்றப்படும். உட்செலுத்தப்பட்ட நீரானது குடலினுள் சுற்றி ஓடவைக்கவும் குடல் அசைவை செய்யவும், ஒரு அழுத்தம் கொடுக்கும் முறையை சிகிச்சையாளர் கையாளுவார். இந்த சிகிச்சை முறையானது ஏறக்குறைய 30 – 45 நிமிடங்கள் வரை எடுக்கும். எனிமா வைப்பது போலல்லாது, மிகவும் இலகுவான முறையாகும். ஒவ்வொருவருக்கும் தேவைக்;கு ஏற்றபடி ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு தடவையும், பின்னர் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு தடவையும் இச்சிகிச்சை முறையைச் செய்யலாம்.

அறிதுயில் அறிவுறுத்தல் (கிப்னோதரப்பி)
ஒருவரை அறிதுயில் நிலைக்கு கொண்டு சென்று, மனது அமைதியாகவும் தெளிவாகவும், சில அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் நேரத்தில், ஒருவருக்கு மனது, உடல் சார்ந்தவற்றில், நன்மை அல்லது முன்னேற்றம் தரக்கூடிய யோசனை அல்லது புத்திமதிகளை சொல்வதன் மூலம், ஒருவரில் மாற்றம் ஏற்ப்படுத்தும் முறையாகும். இந்த சிகிச்சை முறையானது மனம் சம்பந்தமான, பயம், அங்கலாப்பு, மனவழுத்தம் போன்ற நிலைகளுக்கு பெரும்பாலும் பயன்பட்டதாக இருந்தபோதிலும், தலையிடி, ஒற்றைத் தலைக்குத்து. குடற்புண், ஆஸ்மா, நித்திரையின்மை, ஐ.பி.எஸ் (இருட்டபிள் பௌல் சின்றம்) போன்றவற்றிலிருந்து நீங்கவும், நீண்ட கால தீய பழக்கங்களான புகை பிடித்தல், மது, போதைப் பொருள் ஆகியவற்றிற்கு அடிமையாதல் போன்ற நிலைகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றிலிருந்து விடுபடவும் பயன்படக்கூடும். ஒருவரின் தன்னம்பிக்கையை உயர்த்திவிடவும், இறந்த கால நிகழ்ச்சிகளின் பாதிப்பிலிருந்து விடுபட்டு, புத்துணர்வுடன், புதிய மேன்மையான இலக்குகளுடன் வாழ்க்கையை முன்னெடுக்க உதவுகின்றது.

‘கிப்னோசிஸ’; – ‘நித்திரை’ என்னும் கிரேக்க அடிச்சொல்லிலிருந்து வந்த இந்த முறையானது

– நித்திரையில் நடப்பவர்களின் செயல் போல் அல்லது பகற் கனவு காண்பவர் போல அமைந்தாலும் இந்த சிகிச்சை முறையைத் தர ஒரு சிகிச்சையாளரின் உதவி தேவைப்படுகின்றது. சிகிச்சையின் பொழுது சிகிச்சை பெறுபவர் சிகிச்சையாளரின் பெரும் பகுதி கட்டுப்பாட்டில் இருப்பார். ஆயினும் அவரது சொந்த கட்டுப்பாடு எப்பொழுதும் அவர் வசமே இருக்கும். அறிதுயில் நிலைக்குப் (ரான்ஸ்) போக விரும்பாத ஒருவரை சிகிச்சையாளரால் கூட அந்நிலைக்கு கொண்டு போக முடியாது. சிகிச்சை நேரத்தின் போது மட்டுமே இவர் சிகிச்சையாளரின் கட்டுப்பாட்டில் இருப்பார். இந்நேரத்திலேயே சிகிச்சையாளர் நன்மை பயக்கக் கூடிய யோசனை அல்லது புத்திமதிகளை மீண்டும் மீண்டும் கூறி மனதில் பதிய வைக்கிறார். மேடை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்படுவது போல், சிகிச்சையாளர் ஒருவரை அவரின் விரும்பம் அல்லது ஒப்புதல் அன்றி அறிதுயில் நிலைக்கு கொண்டு போய் விட முடியாது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுபவர்கள் அவ்வாறு இலகுவில் அறிதுயில் நிலைக்குப் போவதற்கு ஒப்புதல் முன்னரே கொடுத்திருப்பார்கள்.

அறிதுயில் நிலையில் மனது ஆறுதல்பட்ட நிலைக்கு போக சுவாசம், இதயத் துடிப்புக்குறைய உடற் செயற்பாடுகளும் சற்றுத்தளர மூளையின் செயற்பாட்டு அலையியக்கம் மாறிப்போகின்றது. இவ்வேளையிலேயே இறந்த காலத்தை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருப்பதுடன், நன்மை தரக்கூடிய திறமைகள், வழிமுறைகளை பார்க்கக் கூடியதாக உள்ளதுடன், நடத்தை மாற்றத்திற்கான யோசனை அல்லது புத்திமதிகளை மனதில் பதிய வைக்கக் கூடியதாக இருக்கும்.

அறிதுயில் அறிவுறுத்தல் சிகிச்சை முறை பற்றி பலருக்கும் பல கேள்விகள் எழுவதுண்டு. இவற்றில் சில பொதுவான கேள்விகளுக்கு பதில் தரப்பட்டுள்ளன.

சில பொதுவான கேள்விகளும் பதிலும்:

கேள்வி: ஏன் அறிதுயில் அறிவுறுத்தல் சிகிச்சை முறையை தெரிவு செய்யவேண்டும்?

புதில்: மிகப்பழைய காலத்திலிருந்தே (6000 வருடங்களுக்கு முன்பே) ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக பயன்பட்ட முறையாகும். ஓவ்வொரும் அறிதுயில் நிலைக்குப் போவதை அறிவார்கள். உடலும் மனதும் அமைதியாகிய வேளை அறிநிலை (எவ்வெயாநெஸ்) தெளிவாகவிருக்கும். இவ்வேளையில் ஆழ் மனதுக்கு (சப் கொன்சியஸ் மைன்ட்), வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய யோசனை அல்லது புத்திமதிகளை சொல்லி வைக்கலாம். இந்த ஆழ் மனதுதான் ஒருவரின் ஆக்கச் செயற்களுக்கும் உணர்வுகளுக்கும் நடத்தைக்கும் தேவையான கருத்துக்களையும் கட்டளைகளையும் கொண்டிருக்கின்றது. எனவே ஆழ் மனதின் ஆரோக்கியம் நன்றே பேணப்படுவது முக்கியமாகும். மேலும் இந்த ஆழ் மனது தான், சுவாசம், குருதிச் சுற்றோட்டம், உடல் இழைய திருத்த வேலை, குருதி வெல்லக் கட்டுப்பாடு போன்ற இச்சையில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

அறிதுயில் முறைதான் உங்களின் அக உலகின் கதவாகும். ஆழ்மனதில் தூங்கிக் கிடக்கக் கூடிய மனதின் திறமைகளை உசுப்பி விடுவதன் மூலம், உடல் உள மாற்றங்களைப்பெறலாம்.

கேள்வி: ஆழ்துயிலில் இருப்பது எவ்வாறு இருக்கும்?

பதில்: உடலும் மனதும் அமைதிப்பட்டிருக்கும். சூழலில் நடைபெறுவது தெரியும், சந்தோசமான உணர்வாக இருக்கும். பகற் கனவு காண்பது போலவோ அல்லது மெதுவாக தூக்கம் வருவது போலவோ இருக்கும். இதன் பின்பு வழமையான நித்திரையின் தரம் சிறந்ததாக இருக்கும்.

கேள்வி: ஏன் ஒரு பயிற்றப்பட்ட சிகிச்சையாளரை தெரிவு செய்ய வேண்டும்?

பதில்: உங்களின் சிகிச்சை பாதுகாப்பிற்கும், சிகிச்சை முறை பற்றிய அறிவிற்கும் அதை வழங்கும் முறைக்குமான பயிற்றப்பட்ட, தகுதிபெற்ற சிகிச்சையாளரிடமிருந்து சிகிச்சை பெறுவது சிறந்ததாகும்.

நான் அறிதுயில் நிலைக்குப் போகமுடியாது போனால் என்ன செய்வது?
புதில்: அறிதுயில் நிலைக்கு போக விரும்பாதவர்களை அறிதுயில் நிலைக்கு கொண்டு போகமுடியாது. ஏனையோரை கொண்டு போகமுடியும். ஆயினும் எவ்வளவு தூரம் ஆழமாக என்பதும், கேள்விகளுக்கு எவ்வாறான பதில் கிடைக்கின்றது என்பதும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடானதாகும். ஆழமான தெளிவான பதில்கள் கிடைக்கும் பொழுது சிகிச்சையின் பலனும் அதிகமாக இருக்கும்.

கேள்வி: சிகிச்சையின் போது நான் மயக்கம் அடைந்திருப்பேனா?

பதில்: நீங்கள் மயக்கம் அடைந்திருந்தால் உங்களால் எதையும் கேட்க முடியாது. அவ்வாறெனில் சிகிச்சையாளர் உங்களுக்கு எதையும் கூறு முடியாது. ஆனால் இச்சிகிச்சையின் பொழுது உங்களின் கவனம் சிகிச்சையாளர் சொல்வதில் குவிந்திருக்க அவை ஆழ்மனதில் படியும்.

கேள்வி: எனது மனதை அல்லது சிந்தனையை யாரும் கட்டுப்படுத்துவதில் எனக்கு இஸ்ரமில்லை?

பதில்: சிகிச்சை நேரம் முழுவதும் நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பீர்கள். சிகிச்சையாளர் சில அறிவுரை அல்லது கட்டளைகளைச் சொல்வதற்காகவே ஓரளவு கட்டுப்பாட்டை உங்களிடமிருந்து எடுக்கிறார். ஆனாலும் ஒவ்வொருவரிலும் அவருக்கு தனித்துவமான நம்பிக்கைகள், கருத்துக்கள், செய்முறைகள், அடையாளங்கள் இருக்கிறது. இவை யாவும் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டு பேணப்படும். மேலும் யாரும் இதை உடைத்து உட்புகமுடியாது.

கேள்வி: சிகிச்சையின் போது என்ன நடைபெறுகிறது என்பது எனக்குத் தெரிந்திருக்குமா?

புதில்: நிட்சயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். சிகிச்சை நேரத்தில் நடந்தது ஞாபகத்திலிருக்கும். ஆயினும் சூழலில் என்ன நடக்கிறதென்பது உங்களை தொந்தரவு செய்யாது. இது நீங்கள் உங்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்கள் என அர்த்தமல்ல, மாறாக உங்களினிடம் இருக்கக் கூடிய ஆற்றல்களை வெளிகொணரும் வழிகாட்டியாகும்.

கேள்வி: எனக்கு கிடைக்கப்போகும் சிகிச்சையாளர் எனக்கு பொருத்தமானவரா என்பதை

எவ்வாறு நான் தெரிந்துகொள்ளலாம்? என்னுடைய விபரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும்?
பதில்: உங்களின் சிகிச்சையாளருடள் முதலில் நீங்கள் பேசிப்பார்க்கலாம். இவர்கள் தகுதிபெற்ற அங்கிகாரம் பெற்ற அனுபவமுள்ள சிகிச்சையாளர்கள். மேலும் அங்கிகாரம் வழங்கிய சபையின் நடைமுறைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே சிகிச்சையளிப்பார்கள் பேசிப்பார்த்த பின்பு, நீங்கள் சிகிச்சை செய்ய விரும்பினால் சிகிச்சை பெறலாம். சிகிச்சையின் ஆரம்பத்தில் உங்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் இரகசியமானவை (சிகிச்சை பெறுபவர் – சிகிச்சையாளர்) இவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். வேறு யாரும் இதை எடுத்துப்பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. சிகிச்சை பெறுபவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே ஒருவருக்கு வேண்டிய சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.

கேள்வி: சிறுபிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க முடியுமா?

புதில்: ஆம் ஐந்து – ஆறு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கவனமாக கேட்டு நடக்க கூடியவர்களானால் நல்லது.

நிணநீர் வடித்தல் சிகிச்சை முறை (லிம்பற்றிக் ரெயினேச் தரப்பி)

நிணநீர் தொகுதியானது ஒரு சிக்கலான வலைப்பின்னலாக உடலில் காணப்படும் நிணநீர் அங்கமாகும். நிணநீர் அங்கமானது நிணநீர் முடிச்சு, நிணநீர் கான், நிணநீர் இழையம், நிணநீர் குழாய், நிணநீர் மயிர்த்துளைக் குழாய் ஆகியவற்றைக் கொண்டமைந்ததாகும். இவை நிணநீரை சேர்த்தெடுத்து குருதிச் சுற்றோட்டத்தினுள் விட்டுவிடுகின்றது. நிணநீர்த் தொகுதி உடல் இழையங்களிலுள்ள மேலதிகமான பாயங்களை அகற்றுதல், கொழுப்பமிலங்களை உள்வாங்குதலும் கடத்துதலும், நோயெதிர்ப்புக் கலங்களை உற்பத்தி செய்தல் ஆகியவற்றை உடலில் செய்கின்றது. இவற்றின் உடற்தொழிலில் ஏதாவது தடங்கல் அல்லது குழப்பம் ஏற்ப்படும் பொழுது நோய் நிலைகள் காட்டப்படுகின்றன. இழையங்களிலிருந்து சேர்க்கப்பட்ட நிணநீரானது நிணநீர்க் குழாய்களினூடாக கீழிலிருந்து மேலாக ஒரு வழிப் பாதையாக கடத்தப்பட்டு கழுத்திலமைந்த குருதிக் குழாயினுள் விடப்படும். நிணநீர் கடத்தலில் தாமதம் ஏற்ப்படுமாயின், தேக்கம் ஏற்ப்பட்டு இழைய வீக்கம் ஏற்படும். அகற்றப்படாத கழிவுகள் தேக்கமடையும். இரண்டாவது செயற்பாடாக, சிறு குடலில் அகத்துறிஞ்சப்படும் கொழுப்பமிலங்களை காவிச் சென்று குருதிச் சுற்றோட்ட தொகுதியினுள் விடுவதற்கு பயன்படுகின்றது. இங்கு நிணநீர் தொகுதி செவ்வனே செயற்படாத பொழுது, கொழுப்பமிலம் காவுதல் நன்றாக நடை பெறாது. மூன்றாவதாக நோயெதிர்ப்புக் கலங்களை உற்பத்தி செய்து நோய்க் கிருமிகளை தாக்கி அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது. இச்செயற்பாட்டின் பொழுது இழையங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பாயம், நிணநீர் முடிச்சுக்களில் வடிகட்டப்பட்டு, நோய்க்காரணிகளை அறிந்து இல்லாது ஒழிக்கின்றது. நோய் காரணிகள் கண்டறியப்பட்டவுடன் நிணநீர் முடிச்சில் மேலதிக நோய் எதிர்ப்புக் கலன்கள் உற்பத்தியாக்கப்பட்டு, நோய் எதிர்ப்பில் பங்கு பெறும். பெரும்பான்மையான மக்களில் மந்தமாக செயற்படும் நிணநீர்த் தொகுதியே காணப்படுகின்றது.

ஆகவே உடல் முழுவதும் பரவிக் காணப்படும் நிணநீர்த் தொகுதியில் ஏற்படக்கூடிய சேதங்கள் அல்லது தடங்கல்களினால், நஞ்சுப் பொருட்கள் இழையங்களில் சேர்க்கப்படுவதோடு கலங்களுக்கு போதியளவு ஊட்டப்பொருட்கள் கிடைப்பதில்லை. நோயெதிர்ப்புத் தன்மையும் குறைக்கப்படுகின்றது. இந்நிலையில் நிணநீர் வடித்தகற்றும் முறையினால் முன்னேற்றம் கொண்டுவரப்படக் கூடும். இது ஒரு நஞ்சகற்றும் அல்லது கழிவகற்றும் முறையாகவும் அமையும்.

நிணநீர் அகற்றுதல் சிகிச்சை முறையானது நிணநீர்;த்தொகுதியை நன்றாக செயற்பட தூண்டிவிடுமாறு செய்துவிடுதலாகும். நன்றாக தொழிற்படும் நிணநீர் தொகுதிச் செயற்பாடுகள், உடலானது அதன் உச்ச செயற்திறனும் இயங்க அவசியமானதாகும். இந்த சிகிச்சை முறையில், ஒருவரின் உடலில், சிகிச்சையாளர் கைகளினாலும் விரல்களினாலும் அலை போவது போன்று அழுத்துவார். இலகுவான இந்த அலை இயக்கமான அழுத்தம், நிணநீர்த் தொகுதிகளின் பகுதிகளை உசுப்பிவிட நிணநீர் ஓட்டம் சீர் செய்யப்படுகினறது, நஞ்சகற்றப்படுகின்றது, நோயெதிர்ப்புத் திறன் மேம்படுகின்றது. இந்த சிகிச்சை முறையால் பின்வரும் அனுகூலங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது :

– இழையங்களில் பாயத்தேக்கம் குறைவதனால் வீக்கம் குறைகின்றது.

– உடலில் நஞ்சகற்றப்படுகின்றது

– நெடுநாள் உடல் நோவிலிருந்து விடுதலை கிடைக்கின்றது.

– இழையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

– நோயெதிர்ப்புத் தன்மை தூண்டிவிடப்படுகின்றது.

– நெடுநாள் சோர்வு நிலை நீக்கப்படுகின்றது, புத்துணர்வு ஊட்டப்படுகிறது

– ஆழ்ந்த இழைப்பாற்று கிடைப்பதனால் நித்திரையின்மை, மனவழுத்தம், ஞாபகமறதி போன்றன குறைக்கப்படுகின்றன.

– தோலின் அடியில் அமைந்த கொழுப்புக் கட்டிகள் அகற்றப்படுகின்றன.

உபகரணங்களின் உதவியுடனும் நிணநீர் இறக்கம் செய்யப்படலாம். எம்முறையில் செய்தாலும் சிகிச்சை முறை இலகுவானதும், ஆறுதல் அளிப்பதுமாகும்.

குறிப்பு:

நிணநீர் இழையங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டு வீங்கும் பொழுது யானைக்கால் நோய் தோன்றுகின்றது.

நிணநீர் வீக்கம் என்னும் நிலை வழமைக்கு மாறான வீக்கநிலை காணப்படுதலாகும். இது முகம், கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடும்.