பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

நுண்ணுயிர் கொல்லி மருந்தும், உணவு ஏற்றுகொள்ளாமையும்

கேள்வி:
எனது மகன் (வயது:31) சில காலமாக உணவு ஒவ்வாமையால் துன்பப்படுகிறார். உண்டவுடன் கழியல் கூடம் நோக்கி விரைந்து செல்ல வேண்டியுள்ளது. உடல் நிறை குறைவாகவுள்ளது. சோர்வும் களைப்பும் எப்பொழுதும் இருப்பதோடு தடிமன், காய்ச்சல்  இலகுவில் பிடித்து விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு  நுண்ணுயிர்  கொல்லி மருந்து வேறு நோய்க்காக கொடுக்கப்பட்டிருந்தது. இது இவரின் உணவு ஒவ்வாமையை பாதிக்குமோ என சிந்திக்கிறேன். எதாவது வழி சொல்வீர்களா?

பதில்:
மேல் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து பார்க்கும் பொழுது IBS என்னும் நிலையின் ஒரு வடிவமாக இருக்க கூடும். சமிபாடு சம்பந்தமான கோளாறுகளின்  பொழுது ஒரு நல்ல  மூலிகை வைத்தியர் அல்லது உயிர் சத்து போசாக்குணவு ஆலோசகரை அணுகுவது முக்கியமாகும். இவர் நீண்ட காலமாக நுண்ணுயிர்  கொல்லி மருந்து (அண்டி பையோடிக்) எடுத்து வந்தமையால் உணவுக்கால்வாயிலுள்ள நன்மை பயக்கும்  பற்றீரியாக்கள் இல்லாததால் சமிபாடு நன்கு நடைபெறுவதில்லை. ஒரு நல்ல வைத்திய ஆலோசனை பெறுவதற்கு முன்பாக, உடனடியாக வயிற்று நோவை குறைத்து வைப்பதற்காக, உணவுக்கால்வாயினுள் நன்மை, தரும் பற்றீரியாக்களை புகுத்துவது முக்கியமாகும். பிரோபயிடிக் (Probiotics)  எனப்படுமிவை, வெவ்வேறு தயாரிப்புகளாக கிடைக்கின்றன.

Bio acidoplillus, Bio kult போன்றவற்றை பயன்படுத்தலாம். இத் தயாரிப்புகளில் பற்றீரியாக்களின் செறிவு வேறுபாடு உண்டு. அதிக எண்ணிக்கையில் இருத்தல் நல்லது. Psylliumhnsk என்னும் தாவரப் பொருளானது உணவுக்கால்வாயில் நீர் தொட்டு வீக்கமடைவதனால், மலம் வீக்கமடைவதனால் மலம் கழிக்க வேண்டிய  உணர்வை தூண்டுகிறது. Slippery Elm, Marshmallow Root Powder  போன்றவை உணவுக்கால்வாய் காயங்களை ஆற்றிவிடுவதாக செயற்படுகிறது. எரிவு தடுக்கப்படுகிறது.

உடலின் சக்தி நிலையை அதிகரிக்க, ச்லோரில்லா(Chlorella) , ஸ்பைருலினா (Spirulina),பார்லி கீரைகள்(Barley Greens)  போன்றவற்றை எடுக்கலாம். சில சிறந்த உணவுகள் நன்மைபயக்கும் பற்றீரியாக்களையும் கொண்டிருப்பதனால் இரட்டிப்பான பயன் கிடைக்கிறது.

மேலும் எதாவது சந்தேகமிருப்பின் எம்மைத் தொடர்வு கொள்ளலாம்.