பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

எம்மை பற்றி

மருந்து.கொம் இணையத்தளம் உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பல விடயங்களை தமிழில் உலகளாகிய தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இணையத்தளம் என நம்புகின்றோம்.

மனிதனுடைய உடமைகளில் உயிரே மிகச் சிறந்தது அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம் வருகின்றது. ஆரோக்கியமற்ற உடலில் வீற்றிருக்கும் உயிரும் பெரிதாக பயனற்றது. ஆரோக்கியம் இல்லாதவனுக்கு வாழ்க்கையால் உண்டாகும் இன்பங்களும் மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. நோயென்பது  உடலிலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலையாகும். உடலோ மனதோ அல்லது இரண்டுமோ நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களால் எதுவித நற்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடிவதில்லை. இதைத்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்வை, இயற்கையான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பேண முடியும். இந்த இணையத்தளத்தில் ஆரோக்கியம் சம்பந்தமான பல விடயங்களை தர முயற்சிப்போம்.

சம காலத்தில் மக்களில் பலர் ஆங்கில மருந்து வகைகளிலிருந்து கிடைக்கும் பக்க விளைவுகள் காரணமாக அவற்றைப் புறந்தள்ளி இயற்கையான மருந்துகளை நாடிப் பயன்படுத்தி வருகின்றனர். பல நூறு வருடங்களுக்கு முன்பதாகவே அறியப்பட்டு, மருந்து தயாரிக்கப்பட்டு, நோய் குணப்பட்டு கிடைத்த மருந்துச்சேர்மானங்கள் இன்றுவரை எம்மிடையே பேணப்பட்டு வருகின்றன. இவற்றையும் இந்த இணையத்தளத்தில் கொண்டுவர விருக்கின்றோம். மேலை நாடுகள் கூட மூலிகை ஆராய்ச்சியில்  மிகவும் தீவிரம் காட்டிவருகின்றன. உலகில் எவ்விடத்திலாயினும் கிடைக்க கூடிய மூலிகையின் நோய் குணப்படுத்தும் தன்மையை ஆராய்ந்து அதனை மக்களுக்கு மருந்தாக தருகிறார்கள். உலகின் எல்லா நாடுகளிலும் மூலிகைகளின் பாரம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. இணையத்தளம் எனும் விஞ்ஞான விந்தைத் தளத்தினூடாக இவற்றைத் தமிழில் கொண்டு வருகின்றோம்.

எம்மில் பலருக்கு எமது உடலின் பகுதிகள் தொழிற்பாடுகள் போன்றவற்றில் அடிப்படையான அறிவே இல்லாமல் இருக்கிறது. உடலின் அமைப்பையும்  தொழிற்பாட்டையும் இந்த தளத்தில் கட்டுரைகளாக தரவிருக்கின்றோம்.

மூலிகை வைத்தியர்கள், போசாக்குணவு பற்றிய ஆலோசகர்கள் தமது சிகிச்சை அனுபவம் வாயிலாக கிடைத்த குறிப்புக்களையும், கேள்விகளுக்கு பதில்களையும் இந்த இணையத்தளத்தில் கொண்டு வரவிருக்கின்றோம்.

இந்த இணையத்தளம் வாயிலாக நேரடித் தொடர்பில் வினாக்களுக்கு விடை தரக் காத்திருக்கின்றோம். மேலும் நீங்கள் மற்றவர்களுக்கு பயன்படும் என நம்பும் கட்டுரைகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றின் தரம் தேர்ந்து தளத்தில் சேர்க்கப்படும்.

இறுதியாக மருந்துப் பொருட்களை வாங்ககூடிய இணையத்தளமொன்றாகவும் உள்ளது. மருந்து.கொம் ஒரு முழுமையான இயற்கை ஆரோக்கிய இணையத்தளமாகும்.