பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

உணவும் பானமும்

இன்றைய நாளில் உணவும் பானமும்

துரித கதியில் இயங்கும் பூமியில், எமது வாழ்க்கையில் எமக்காக நாம் நேரத்தை ஒதுக்குவதில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தமது செய்திறனினளவில் குறைவாகவே செயற்படுகின்றனர். இவர்களின் உணவின் அதிகளவு கொழுப்பும், குறைந்தளவு பழங்களும், மரக்கறிகளும் தான் இருக்கின்றன. இவர்களது ஓய்வற்ற வாழ்க்கை முறை அல்லது தொழில் அதிகளவு மனவழுத்தத்தைத் தந்துவிடுகின்றது. இந்த நிட்சயமற்ற, நிரந்தரமற்ற, வேகமான சூழல் சார்நிலைகள் உடலில் இதயவழுத்தம், உடல்பருமனடைதல், நீரிழிவு போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்பளிக்கின்றது. ஆனால் இதிலிருந்து நாம் விடுபட்டு வாழலாம்.

எமது ஆரோக்கியம் நாம் என்ன உண்ணுகிறோம் என்பதில் பெருமளவில் தங்கியுள்ளது. உணவுக்கும் உடல் நோய்களுக்குமான தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. என்பு நலிவடைதல் (ஒஸ்ரியோபுறோசிஸ்), புற்றுநோய் (கான்சர்), மலச்சிக்கல், குடல் சம்பந்தமான நோய்கள் போன்றன உணவுடன் தொடர்புள்ள நோய்களாகும்.

உணவும் உடலும்

நாம் வாழ்வதற்கு உணவு இன்றியமையாததாகும். உணவிலிருந்து தான் நாம் உயிர்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் உடலிற்கு கிடைக்கின்றன. ஆரோக்கியமான வாழ்விற்கு இவை முக்கியமாவையாகும். சில உணவுகள் இன்னோர் உணவை விட ஆரோக்கியமானதாகும். மேலும் இவை சில நோய் நிலைகள் தோன்றக்கூடிய அபாயத்தைக் குறைத்துவிடுகின்றன. (உ-ம்) புற்றுநோய், சில நலிவடைய செய்யும் நோய்கள், புதிதான அல்லது உடனடியாக பெறப்பட்ட மரக்கறிகள், பழவகைகளில் பெருமளவான ஆரோக்கியத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஒட்சியேற்றத்தை தடுப்பன (அன்ரிஒக்சிடன்ற்), பிளேவனொயிஸ்ட், இதர தாவர இரசாயனங்கள் போன்றன, உடலாரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க முக்கியமானவையாகும்.

1. பிறபொருள் நுழைவின் எதிருணர்வு (அலேயீ)
2. உணவு ஒவ்வாமை
3. உணவு கூருணர்வுத்திறன் (மேலிரண்டடிண்டையும் சேர்த்தது).

மேற்கூறப்பட்ட மூன்று தாக்கங்களில் ஒன்று சிலருக்கு சில உணவுகளை உண்ணும் பொழுது ஏற்பட்க்கூடும்.

பிறபொருள் நுழைவின் எதிருணர்வு எனப்படுவது (அலேயீ), சாதாரணமான உணவுப் பொருளொன்று அல்லது வேறு இரசாயனங்கள் ஒருவரினுடலில் நோயெதிர்ப்பை (இமியுன்) (மிகையாக) தூண்டிவிடுகின்றது. இந்த தாக்கத்தின் விளைவாக, கண்மடல் வீக்கம், சுவாசிக்க முடியாமலிருத்தல், மூக்கு, தோல் பகுதிகளில் அரிப்பு தோலில் எரிச்சல், உடலின் சில செயலிழப்புக்கள், சில சமயம் இறப்பு கூட ஏற்படலாம். ஊடலில் நோயெதிர்ப்பை ஏற்படுத்தும் காரணியை ‘பிறபொருள்’ எனக் குறிப்பிடலாம். வாயினூடாக மூக்கினூடாக அல்லது தோலின் தொடுகையினூடாக உடலைச் சென்றடையலாம். பொதுவாக பிறபொருட்களாக மகரந்தமணி, வீட்டு தூசி நுண்ணுயிர் (டஸ்ற் மைற்), சிறு பூச்சிக்கடி, வளர்ப்பு பிராணி மயிர், இரசாயனங்கள், உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றன பிறபொருட்களாக காணப்படுகின்றன.

எங்களில் உடலின் நோயெதிர்ப்பு முறையானது பற்றீரியா, வைரஸ் போன்ற நோய் தரவல்ல நுண்ணங்கிகளுக்கு எதிராக போராடி அழிக்கின்றது. அலேயீ நிலையுள்ள ஒருவரில், வழமையில் உடலில் எதுவித மாற்றத்தையும் தராத பொருளொன்றை உடல் நோய்தரவல்ல பிறபொருளெனக் கருதிக்கொண்டு, அதை எதிர்த்துக் கொல்லவென ஐயிஈ (இமினோகுளோபின் ஈ) என்னும் பிறபொருள் எதிரியை உற்பத்தி செய்கிறது. இவ்வேளையில் உடலிலுள்ள ‘மாஸ்ற்’ கலங்கள் ‘கிஸ்ரமின்’ போன்ற இரசாயனங்களை பிறபொருளை எதிர்ப்பதற்காக வெளிவிடுகின்றன. இதுவே அலேயீ தாக்கத்திற்காக வெளியடையாளங்களாக காட்டப்படும். பொதுவாக மூக்கு, தோல், சுவாசப்பை, உணவுக் கால்வாய் (குடல்) போன்றனவாகும். வுழமையான அலேயீ தாக்கத்தில் வெளியடையாங்களாக வாந்தியெடுத்ல், வயிற்றாலை போதல் (டயறியா), மகரந்த காய்ச்சல் (கே பிவர்) ஆஸ்மா (இருமல், இழுப்பு, முட்டு (சுவாசிக்கமுடியாமை)) மூக்கடைப்பு, மூக்கு வடிதல், தோல் தடிப்புக்கள், எக்சிமா போன்றன காட்டப்படுகின்றன.

அலேயீ எவ்வளவு பொதுவானது?

அலேயீ தாக்கமேற்படுவதற்கான காரணங்கள் பலவாக காணப்படுவதுடன், இலகுவாக கண்டறியக்படக் கூடியதாகவுமில்லை. குறிப்பிட்ட ஒரு பொருள் எத்தனை பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் இன்னமும் அறியப்பட்வில்லை. மேலும் சில தாக்கங்கள் மிகவும் இலேசானதாக இருப்பதனால் கண்டறியப்படாமலோ அல்லது கவனத்திற்கு வராமலோ போய்விடுகிறது. ஆஸ்மா, மகரந்த காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு சூழல் மாசடைதல், இரசாயனங்களின் அதிகரித்த பயன்பாடு, கிருமிநாசிகளை பயன்படுத்துதல் போன்றன காரணமாகின்றன. நவீன மருந்துகளும் எமது நோயெதிர்ப்புத் திறனைக் குறைத்து வைத்திருப்பதாக கருதப்படுகிறது. அலேயீ அல்லது ஒவ்வாமை எந்த வயதிலும் ஏற்படக்கூடும். முன்பெல்லாம் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத உணவொன்று திடீரென அலேயீ தாக்கத்தை தரக்கூடும். மாறாக, உணவுக் கூருணர்வுத்திறன் ஏற்ப்படுத்திய பிரதிகூலமான தாக்கங்கள் முற்றாக மறைந்து விடவும் கூடும்.

தலைமுறைத் தொடர்பு
அலேயீ தாக்கத்திற்கு பலமான தலைமுறைத் தொடர்பு காணப்படுகின்றது. பெற்றோருக்கு அலேயீ இருக்குமாயின் பெரும்பாலும் பிள்ளைகளுக்கும் இருக்கக்கூடும். நோயெதிர்ப்பிற்கான ஜஜிஈ இன் அளவு அதிகமாக குருதியில் காணப்படுமாயினும் அலேயீ இலகுவில் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் குருதியில் ஜஜிஈ காணப்படுவர்களில் ஆஸ்மா, மகரந்த காய்ச்சல் போன்ற நோய்களில் அவதிப்படுபவர்களாவும் சில உணவுகளுக்கு தாக்கங்களை காட்டுபவர்களாவும் காணப்படுகிறார்கள்.

உணவு ஒவ்வாமை (பூட் இன்ரொலறன்ஸ்)
ஒவ்வாமை எனப்படுவது சில உணவு வகைகளை உட்கொள்ளும் பொழுது சகிக்க முடியாத அல்லது வெறுக்கத்தக்க தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது. இதுவும் உணவு கூர்திறனுணர்வின் (சென்சின்ரிவிற்ரி) ஒரு பிரதிபலிப்பாகும்.

உணவு ஒவ்வாமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. உணவுக் கூறொன்றைச் சமிபாடு அடையச்செய்யும் நொதியங்களின் செயற்பாடு அல்லது உணவுக் கால்வாயிலுள்ள பற்றீரியா போன்றன காரணங்களாலாம். உதாரணமாக பால் வெல்ல (லக்ரோஸ்) ஒவ்வாமை ஒரு அலேயீ தாக்கமல்ல, மாறாக ஒவ்வாமை காணப்படுவரிடம் பால் வெல்லத்தைச் சமிபாட்டையச் செய்யும் லக்ரேஸ் என்னும் நொதியத்தினளவு குறைவாக காணப்படுகின்றது. கோப்பி, தேயிலை, சொக்லேற், கோலா, போன்றனவற்றில் காணப்படும் கபீன், படபடப்பையும் அமைதியின்மையும் கொண்டுவரக்கூடும். சிவப்பு வைன், சொக்லேற், சீஸ் போன்றவற்றில் காணப்படும் அமீன் பதார்த்தம் ஒற்றைத் தலைவலியை (மைகிறேன்) பொறிதட்டிவிடக் கூடும்.

உணவும் கூர்வுணர்வுத்திறன் (பூட் சென்சிற்ரிவிற்ரி)

சில உணவுகளுக்கு அல்லது இரசாயனங்களுக்கு அல்லது பதார்த்தங்களுக்கு உடல் அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அலேயீ, ஒவ்வாமை ஆகியன இரண்டு முறைகளில் ஏற்படுவதும் உணவு அதிக கூர்வுணர்வுத்திறனின் (கைப்பெர் சென்சிற்ரிவிற்ரி) வெளிப்படாகும்.

வேறு வகையான பிறபொருட்கள் (அலேர்யன்ஸ்)
உணவுகள் தவிர்ந்த அலேயீ தாக்கம் தரவல்ல பிறபொருட்களும் காணப்படுகின்றன. அலேயீ தாக்கம் தரவல்ல காரணங்களை அல்லது ஏதுக்களைக் கண்டறிந்து அவற்றைச் சூழலிருந்து அகற்றுவதன் மூலம், தாக்கங்களைத் தவிர்க்துக்கொள்ளலாம்.

வீட்டு தூசிப் பூச்சி

வீடுகளில் காணப்படக்கூடிய நிலவிரிப்புசாளரத்திரைகள் போன்றவற்றில் தங்கிப்பெருகும் இந்த நுண்ணுயிர்கள் உடலுக்கு பிறபொருளாகும். வீட்டை நன்றாக சுத்தம் செய்து, சாளங்களைத் திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டைத்தை அதிகரித்து, ஒளிபடச்செய்வதனால் நுண்ணங்கிகளின் பெருக்கத்தைக் குறைக்கலாம். நிலத்திற்கு மரப்பலகை அல்லது லைநோ போன்றவற்றை பயன்படுத்தினால் தூசிப் பூச்சியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

தேனீ அல்லது குளவி கொட்டுதல்
இவை கொட்டும் போது நோவும் வீக்கமும் ஏற்படக்கூடும் சில சமயம் (அனபிலரிக் சொக்) எனப்படும் உயிராபத்ததையும் ஏற்படுத்தக் கூடும்.

அணிகலன் (நகை)
உலோக (குறிப்பாக நிக்கல்) தோல் அழர்ச்சியை உண்டுபண்ணும்.

மருந்து (மெடிசின்)
அஸ்பிரின், பென்சிலின் போன்ற நுண்ணுயிர்க்கொல்லிகள் (அன்ரிபயோரிக்ஜஸ்) தோலில் அலேயீ தாக்கத்தை உண்டுபண்ணலாம். அஸ்பிரின், ஆஸ்மா நோயைக் கொண்டுவரலாம்.

செல்ல அல்லது வளர்ப்பு பிராணி (பெற்ஸ்)

புராணிகளின் மயிர் அல்லது இறகு மயிர், அலேயீ தாக்கங்களை (ஆஸ்மா, எக்சிமா) ஏற்ப்படுத்தலாம்.

மகரந்த மணி
மகரந்தக் காய்ச்சலிற்கு காரணமாகும் தும்மல், மூக்கடைப்பு, கண் கடி போன்ற தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனால் பாதிப்பிற்குள்ளாவோர் மகரந்த மணி காற்றில் பரம்பும் வேளை வெளியில் போகாது சாளரங்களை மூடிய வீட்டிலிருத்தல், கண்குளிர்மைக் கண்ணாடியணிதல் ஆகியவற்றை செய்வதனால் தாக்கத்தை சற்றுத் தவிர்த்துக் கொள்ளலாம்.

குளியலறை மற்றும் அழகுசாதனப் பொருட்கள்
சில பாவனைப் பொருட்கள் அலேயீ ஐத் தரக்கூடும் அலேயீ தராது அல்லது அலேயீ தரும் பொருட்களின் கலப்பில்லாத அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தவேண்டும்.

அலேயீ அல்லது ஒவ்வாமையைக் கண்டுகொள்ள ஒவ்வாமை அல்லது அலேயீ இருக்குமென சந்தேகிக்கும் பொழுது முதலில் உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசிக்கவேண்டும். வேறு நோய்நிலைகள் இல்லாத பொழுது உணவு ஆலோசகரின் (டயற்ரீசியன்) அறிவுறுத்தலின்படி உணவில் மாற்றங்களை ஏற்படுத்திப் பார்க்கலாம். சில உணவுகளை தவிர்த்துக் கொள்ளலாம். அலேயீ சோதனை (அலேயீ ரெஸ்ற்) அல்லது உணவு ஒவ்வாமை சோதனை (பூட் இன்ரொலறன்ஸ் ரெஸ்ற்) மூலம் அலேயீ, ஒவ்வாமையைக் கண்டுகொள்ளலாம்.

அலேயித் தாக்கம், கூடிய சீக்கரம் நடைபெறக்கூடுமா?

நிலக்கடலை (பீநட்ஸ்) மீன், முட்டை, எள் (சிசாமி) போன்றவற்றினால் அலேயீ தாக்கம் ஏற்படக்கூடியவர்களுக்கு உடனடியாக ஏற்படக்கூடும். கடுமையான தாக்கம் உயிராபத்தானதும் கூட. முதலாவது தடவை வந்தபின், தாக்கம் தரும் உணவுகளை முற்றாக தவிர்ப்பதோடு, தேவையான மருந்துகளையும் கைவசம் வைத்திருத்தல் வேண்டும் (உ-ம் ஸ்ரொயிட் இன்கேலர், அன்ரி-கிஸ்ரமின் மாத்திரை, அவசரத்திற்கு பயன்படும் அரிதினல்)

பால், கோதுமை போன்றவற்றினால் தாக்கம் பொதுவாக கடுமையானதாக இருப்பதில்லை, 12 – 48 மணிநேர இடைவெளியின் பின்பே தாமதமாக காட்டப்படுகிறது. குழந்தைகளை தாய்ப்பாலிலிருந்து, பால் மாவிற்கு மாற்றும் பொழுது ஏதாவது தாக்கம் (தலையிடி, தோல் வருத்தம், சைனஸ், உணவு சமிக்காமலிருத்தல்) ஏற்படுமாயின் அதற்குரிய காரணம் சூழலிலிருந்து அல்லது வழமையான உணவிலிருந்து வந்திருக்கவேண்டும். இவர்களது உணவு பெரும்பாலும் பாலும் கோதுமையுமாக இருப்பதனால் அவையே முதலில் சந்தேகிக்கப்படுகின்றன. பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள்: பசுப்பால் சார்ந்த உணவுகள்: பால், தயிர், கோதுமை, விதைகள் (கொட்டைகள்), தோடைக் குடும்ப பழங்கள், தோடைப்பழப் பானங்கள், கோப்பி, சொக்கலேற், முட்டை, செல் பிஸ்.

ஒவ்வாமை அல்லது அலேயியைக் கண்டறிவதற்கான சோதனை முறைகள்

1. ஆர் ஏ எஸ் ரி (றேடியோ அலேயி சோர்பெற்ஸ் ரெஸ்ற்) தீவிர தாக்கத்தை தரவல்ல பொருட்களிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் பிறபொருளெதிரியை (ஐஜிஈ – இமினோ குளோபின் ஈ) அளவிடும் முறையாகும்.

2. தோலில் குத்தி சோதனை செய்தல் (த ஸ்கின் பிறிக் ரெஸ்ற்)
தாக்கம் ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படும் பிறபொருளை (அலேஜென்) குறிப்பிட்ட தரத்தில் தயார்செய்து, அதனை மிக சிறிய அளவில் தோலில் விட்டு, பிறபொருள் தோலைக் கடந்து கீழே சென்ற பின்பு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதனை அவதானித்தல். இம்முறை சூழல் காரணிகளான, மகரந்தமணி, பூனை அல்லது பறவை மயிர் போன்றவற்றிற்கு உடனடியான தாக்கத்தைக் காண்பிக்கின்றது. ஆயினும் உணவு ஒவ்வாமை சோதனையாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் உணவு தாமதமான ஒவ்வாமை அடையாளங்களைக் காண்பிக்க கூடும். அதிதீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென கருதப்படும் இடத்தில் (அனபிளசிஸ்), இம்முறை மிகவும் பயனுள்ளதாகும்.

3. பூட் இன்ரொலறன்ஸ் ரெஸ்ற்
குருதித் துளிகள் பெறப்பட்டு, துருதியில் ஏற்கனவே உற்பத்தியாககப்பட்டிருக்கும் ஐஜிஈ பிறபொருள் எதிரியின் அளவை மதிப்பிடுவதன் மூலம், எவ்வாறான உணவுக் கூறுகள் பிறபொருள் எதிரிகளை உண்டாக்கியிருக்கின்றன என அறிய முடியும். 48 வகையான உணவுகளிலும் உணவு சேர்மானங்களிலும் ஒவ்வாமைக் காரணிகள் இருக்கின்றனவா எனக் கண்டறிய முடியும். ஏறக்குறைய 45 நிமிடங்கள் வரை எடுக்கும். இந்த சோதனை முறை மூலம் ஒவ்வாமைக் கூறுகளை இலகுவில் கண்டறியலாம்.

4. த வேகா செஸ்ற்
அலேயி தாக்கத்தைக் கண்டுபிடிக்கும் எந்திரத்துடன் இணைக்கப்பட்ட ஒரு மின்வாயை (எலெகறோறொட்ற்) கையில் வைத்திருப்பதன் மூலம், எந்திரத்தில் வைக்கப்பட்ட பிறபொருளுக்கு ஏதாவது தாக்கம் ஏற்படுகிறதா என அவதானித்தலாகும். இம்முறை தரும் முடிவுகள் நம்பும்படியாக இல்லை.

5. பாலும் ஒவ்வாமை
குழந்தைகளில் பால்வெல்ல (லக்ரோஸ்) ஒவ்வாமை இருந்தால், மலத்தில் அமிலத்தன்மை காணப்படும். சமிபாடடையாத பால்வெல்லம், லக்ரிக் அமிலத்தை உண்டாக்குகிறது.

பொதுவான அலேயீ தாக்கமும் வெளியடையாளங்களும்

தாக்கநோய்: மகரந்த காய்ச்சல்
பிறபொருள்: மகரந்தமணி
வழமையான
வெளியடையாளம்: தும்மல், கண்களில் நீர்வடிவு, மூக்கடைப்பு, கண்களில் கடி

தாக்கநோய்: ஆஸ்மா
பிறபொருள்: தூசி பூச்சி, விலங்கு மயிர்
வழமையான
வெளியடையாளம்: தும்மல், சுவாசிக்க முடியாமை

தாக்கநோய்: அலேயிக் றைனயிற்ரிஸ்
பிறபொருள்: தூசி பூச்சி,விலங்கு மயிர்
வழமையான
வெளியடையாளம்: மூக்கு வடிதல,; கண்களில் கடி

தாக்கநோய்: தோல் வெடிப்பு (தோல் அழர்ச்சி)
பிறபொருள்: உணவு மருந்துகள்
வழமையான
வெளியடையாளம்: தோல் சொறிவு (தோல் பொங்குதல்)
உணவு அலேயீ தாக்கம்

தாக்கநோய்: குடல் சம்பந்தமான நோய் (சீலியாக் நோய்)
பிறபொருள்: குளுட்டன் (கோதுமை, பார்லி, ஓட்ஸ், ஆகியவற்றிலுள்ள குளுட்டன் புரதக்கூறு) அலேயீ
வழமையான
வெளியடையாளம்: குறைவான வளர்ச்சி, வாந்தி, வயிற்றோட்டம், களைப்பு போன்றவற்றினால் நிறையிழப்பு

தாக்கநோய்: கோதுமை அலேயீ
பிறபொருள்: கோதுமையும் கோதுமைத் தயாரிப்புக்களும்
வழமையான
வெளியடையாளம்: ஆஸ்மா, தோலில் சொறிவு, வயிற்றுபோக்கு

தாக்கநோய்: நிலக்கடலை
பிறபொருள்: நிலக்கடலை (ஏனைய விதைகளும் கொட்டைகளும்)
வழமையான
வெளியடையாளம்: உயிராபத்தை விளைவிக்கக்கூடிய (அனபிலற்ரிக் சொக்) ஏற்படுத்தக்கூடியது. இந்த நேரத்தில் சுவாசிக்க முடியாமல், உதட்டைச் சூழ நீல நிறம் படர, மயக்கம் வர கூடும், சுயநினைவும் இழக்கலாம்.

தாக்கநோய்: முட்டை அலேயீ
பிறபொருள்: முட்டையும் முட்டைத்தயாரிப்புக்களும்
வழமையான
வெளியடையாளம்: எக்சிமா, தோல் அழர்ச்சி

தாக்கநோய்: மீன் அலேயீ
பிறபொருள்: மீன், சிப்பி மீன்
வழமையான
வெளியடையாளம்: குறைந்த அளவில் தோல் தடிப்புக்கள் ஏற்படும் அதிக அளவில் அனபிலற்ரிக் சொக் ஏற்படக்கூடும்.

தாக்கநோய்: பால் அலேயீ
பிறபொருள்: பால் புரதம்
வழமையான
வெளியடையாளம்: ஏக்சிமா,ஆஸ்மா, றைனயிற்ரிஸ், வயிற்றுக்குழறுபடிகள்.

உணவு தெரிவு செய்யும் முறை

தொல்லை தரும் உணவுகளை, உணவுச் சோதனை மூலம் கண்டு கொள்ளலாம். சோதனைக்குட்படும் ஒருவரின் உணவு, நோய்தரும் என தங்கியுள்ளது. பல உணவுக் கூறுகள் காரணமென கருதப்படுமிடத்தில், சரியான உணவுக் கூற்றை திட்டமாக கண்டுபிடிப்பது கடினமானதாகும். ஒருவரின் உணவு சார்ந்த அறிவும், உளவியல் சார்ந்த நம்பிக்கையும், சோதனை முடிவுகளை மாற்றிவிடக்கூடும். இவ்வேளையில் சில மறைக்கப்பட்ட அல்லது தெரியப்படுத்தப்படாத (பிளைன்ட் ரெஸ்ற்) முறைகளைக் கையாளுவதன் மூலம் காரணமான உணவுக் கூற்றை கண்டுபிடிக்கலாம். ஒவ்வாமை ஒருவருக்கு வாழ்க்கைக் காலம் முழுவதும் நீடிக்கவேண்டுமென்னும் அவசியமில்லை. ஒவ்வாது எனக் கருதுமுணவை உணவிலிருந்து சில காலம் தவிர்க்கவேண்டும். சிறிய ஓய்வு காலத்தின் மீண்டும் சிறிய அளவில் அறிமுகப்படுத்தலாம். ஆயினும் அதிகமாகவும் அடிக்கடியும் உட்கொண்டுவர உணவினால் ஏற்ப்படக்கூடிய தொல்லைகள் மீண்டும் வரக்கூடும். உணவு சோதனை முறைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

எளிய உணவு தவிர்ப்பு

எந்த உணவு நோய் (தொல்லை) தருகின்றது எனப் பெருமளவில் குறிப்பாக தெரிந்திருந்தால், அவ்வுணவு அவ்வுணவுக்கூறு கொண்ட உணவுகளைத் தவிர்தபின், நோயின் அறிகுறிகள் எவ்வாறு மாறுகின்றது என்பதை அவதானிக்கவேண்டும். சிவப்பு வைன், சீஸ், தோடை வகைப் பழங்கள் போன்றன இலகுவில் தவிர்த்து சோதனை செய்து பார்க்கலாம். கோதுமை அல்லது பால் கொண்ட உணவுகளை தவிர்க்கவேண்டுமாயின். உணவு ஆலோசகருடன் கலந்தாலோசிக்கவேண்டும். ஏனெனில் பல உணவுகளில் இவை ஓர் கூறாக அமைவதனால் மிகவும் சிறிய எண்ணிக்கையில் உணவுகளே உண்ணக் கிடைக்கும். இவ்வேளையில் உடலுக்கு வேண்டிய போசாக்குகள் சோதனை வேளை கிடைக்காமல் போகக்கூடும். சில கிழமைகளுக்கு சந்தேகப்படும் உணவை தவிர்த்த பின்னர், மீண்டும் அதை சிறிய அளவில் அறிமுகப்படுத்தவேண்டும். ஏற்கனவே பாதகமான அறிகுறி தந்த உணவை (உ-ம் நிலக்கடலை, கட்டாயமாக உண்ணவேண்டாம். முன்னர் நிகழ்ந்த உயிராபத்து தரவல்ல நோய்நிலையை மீண்டும் பரீட்சித்துப் பார்க்கவேண்டாம்.

பல உணவு தவிர்ப்பு

தொல்லை / நோய்நிலை தரும் உணவுகள் பலவெனக் கருதப்பட்;டால் (உ-ம் பால், பால் கொண்ட உணவுகள், முட்டை, சிப்பி மீன், கோதுமை, தோடைவகைப் பழங்கள், கோப்பி, சொக்கலேற், சோளம், புரை (மதுவம்), சோயா. இவை யாவற்றையும் உணவிலிருந்து முற்றாக 2-3 கிழமைகளுக்கு தவிர்த்தபின் நோயின் அறிகுறிகள் மறைந்தனவா அல்லது மாறினவா என்பதை அவதானிக்கவேண்டும். நோயின் அறிகுறிகள் குறைந்திருந்தால், தவிர்க்கப்பட்ட உணவுகளில் ஒன்றை மட்டும், ஒரு நேரத்தில் உணவில் சேர்த்து பல நாட்களுக்கு அவதானிக்கவேண்டும். நோய்க்குறி மீண்டால் அவ்வுணவே நோய்க்காரணியாகும். இல்லாவிடில், ஏனைய உணவுகளையும் ஒவ்வொன்றாக உணவில் சேர்த்து சோதனை செய்யவேண்டும். இம்முறை பல தடவைகள் செய்யப்படுவதனால் நீண்ட நாட்கள் எடுத்தாலும் திட்டமான உணவைக் கண்டறியும் முறையாகும். இந்த உணவுக் கட்டுப்பாட்டு சோதனையின் போது நோய்க்குறியில் மாற்றம் எதுவும் இல்லாத பொழுது, எளிய சோதனையைச் செய்து பார்க்கலாம். அல்லது உணவு சாராத நோய்க் காரணியாக இருக்கக்கூடும்.

கட்டாய தவிர்ப்பு உணவு

இந்த உணவு கட்டுப்பாட்டு முறையில், மிகவும் அருமையாக தாக்கம் விளைவிக்க கூடிய உணவு மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவதனால், சேர்க்கப்படக்கூடிய அடிப்படையான உணவுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். (உ-ம் ஆட்டிறைச்சி (லாம்ப்), ரேக்கி இறைச்சி, உருளைக்கிழங்கு, சோறு, பியர்ஸ், கோலிபிளவர், புறக்கோலி, சூரியகாந்தி எண்ணெய், ஒலிவ் எண்ணெய், போத்தலில் அடைத்த நீர்). மருந்துகள் ஒன்றும் பலன் தராத பொழுதே, இம்முறை அறிவுறுத்தப்படுகிறது என்னென்ன உணவுகள் ஒருவருக்கு கொடுக்கவேண்டுமென உணவு ஆலோசகர் தீர்மானிப்பார். மிகவும் கட்டுப்பாடாக 2 – 3 கிழமை உணவைப் பின்பற்றிய பின்னர், ஒவ்வொன்றாக மீண்டும் உணவில் சேர்க்கப்பட்டு, நோய்க்குறிகளை அவதானித்து, நோய்தரும் உணவை கண்டுபிடிக்கலாம்.

அரிதான உணவுச் சோதனை, இதுவும் கட்டாய தவிர்ப்பு உணவு போலவே அமையும். ஆனால் இதுவரையில் உண்ணாத அல்லது மிகவருமையாக உண்ட உணவுகளை (உ – ம் உண்ணாத பழவகைகள், இறைச்சிவகை, மரக்கறிகள்) போன்றவை உண்ண அனுமதிக்கப்படும். முன்னருண்ணாத உணவு நோய்க்குறியை தரமாட்டாது என்னும் கருத்தினடிப்படையில் இச்சோதனை செய்யப்படுகிறது. இதன் பின்னரும் நோய்க்குறி நீடிக்குமாயின் நோய்க்கான காரணம் உணவிலிருந்து வரவில்லை என்பது நிரூபணமாகும். ஏனைய காரணிகளை (உ-ம் வேறு நோய்நிலை) ஆராயவேண்டும்.

உணவு நாட்குறிப்பேடு

உண்ணுமுணவின் பெயர், உண்டநேரம், ஏதாவது உணரப்பட்ட குறிகள் போன்றவற்றைக் குறித்துவைத்தால், இதனடிப்டையில் எவ்வாறான உணவை உண்கின்றோமா (உ-ம் முழுநிறை உணவு) எந்த உணவு ஒவ்வாமையைத் தருகிறது அல்லது நோய்க்குறியை தருவது உணவுக் கூறற்ற வேறு காரணிகள் (உ-ம் மனவழுத்தம்) இரசாயனங்கள், மாதவிடாய் சக்கர நிலைகள்) போன்வற்றைக் கண்டறியப்பயன்படும். உண்ட யாவற்றையும் கவனமாக குறித்துக்கொள்ளவேண்டும். நோய்க்குறி மாற்றங்களையும் (உ-ம் அதிகரித்து, குறைந்தது, மாற்றமில்லை) குறிக்கவேண்டும். சில சமயம் நாட்கள் தாமதமாக (உ-ம் மணித்தியாலங்கள், நாட்கள் தாமதமாக) தென்படக்கூடும். மதிய உணவுக்கூற்றின் தன்மையை இரவுணவுக் கூறொன்று அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடும். இந்த உணவு நாட்குறிப்பேடு, குடும்ப வைத்தியர், உணவு ஆலோசகர் போன்றோருக்கு, குடும்ப வைத்தியர், உணவு சார்பான முடிவுகளை எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாகும். நீங்கள் என்ன உண்வீர்கள் என்பதில் எப்பொழுதும் அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.