பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

பெண்களுக்கு

மருந்து.கொம் ~ கேள்வி-பதில் ~ பிரிவு-06 (மனவுளைச்சல்)

கேள்வி :
எனது மகள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறாள். அவள் அதிகம் மன உளைச்சiலுக்கு ஆட்பட்டிருப்பதால், அவள் படிப்பில் ஊன்றிக் கவனம் செலுத்த முடியாமலிருக்கிறாள். கடந்த இரு மாதங்களில், ஒழுங்கான நித்திரை கொள்ள முடியவில்லை அத்துடன் அடிக்கடி தலையிடியும் வந்திருந்தது. அவரின் துன்பத்தைப் பார்க்க சகிக்க முடியவில்லை. இந்த நிலைக்கு உதவக்கூடிய ஏதாவது சிபார்சு செய்வீர்களா?

பதில்:
மனவுளைச்சல் என்பது மனதுக்கு கடுமையான வேளைகளில், அதைத்; தாங்கிக் கொள்ள இயல்பாக ஏற்ப்படும் ஓருணர்வாகும். இந்த உணர்வு குறைந்த அளவிலிருக்கும் பொழுது, அது உங்களை போதியளவு தூண்டி காரியங்களைத் திறம்பட செய்து முடிக்க உதவுகிறது. அளவுக்கதிமாகும் போது அது பெரும் பிரச்சைனயாகிவிடுகிறது.

மயின்ட் எனப்படும் இலண்டன் உள ஆரோக்கியம் பற்றிய ஸ்தாபனம், மனவுளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் வெளியடையாளங்களைப் பற்றி கூறுகிறது. இவர்களுக்கு தலையிடி, பசியின்மை, எப்பொழுதும் களைப்பு, நோயுற்றதான உணர்வு, மனவமைதிகொள்ள முடியாத நிலை போன்றவற்றோடு, அமைதியான நித்திரை கொள்ள முடியாத நிலை, மிக சடுதியில் கோபம் கொள்ளுதல், அதிகமாக மதுவருந்துதல் அல்லது புகை பீடித்தல், என்ன ஏது செய்யவதறியாத நிலை (பனிக்) ஆகியனவும் காணப்படுவதாக அறிவிக்கிறார்கள்.

பரீட்சைப் பயப்பீதியை குறைப்பதற்கு, நீங்கள் பரீட்சைக்கு நன்றே, ஆயத்தம் செய்யவேண்டும். பரீட்சைக்கு முன்பதாகவே, பரீட்சைக்கான மீட்டலுக்கான நேர அட்டவணையை ஒழுங்கு செய்வதோடு, அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும். உங்கள் ஆசிரியரிடம் கேட்டு, கடந்த வருட அல்லது மாதிரி வினாத்தாட்களை பெற்று, அவற்றிற்கு விடையெழுதி வினாத்தாளை விடையெழுதுதலில் போதியளவு அனுபவம் பெறவேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது வினாவின் வடிவம், விடை எழுதும் அனுபவம், நேர நிபந்தனைக்குள் எழுதுதல் போன்றவற்றில் பரீட்ச்சயம் கிடைக்கிறது. பரீட்சை நாளில் மனத்திடனுடன் எழுதலாம்.

மூளை இளைப்பாற்றுக்கான (றிளைக்ஸ்) நேரத்தை ஒதுக்கவேண்டும். இவ்வேளையில் பிடித்தமான ஒரு புத்தகத்தை வாசிக்கலாம் அல்லது பிற்பகலில் நீண்ட நேரம் குளியல் தொட்டியில் குளிக்கலாம். போதியளவு இளைப்பாறினால் நீங்கள் எடுத்த காரியத்தில் நன்றே செயலாற்றலாம். நன்றாகவே செய்யவேண்டும் என்ற உணர்வு மனதில் எப்பொழுதும் மேலோங்கி இருக்கவேண்டும். பரீட்சைகள் முழுவதும் அல்ல, முற்றும் அல்ல – பரீட்சையில் நன்றே செய்தேன் என்னும் உணர்வே போதியதாகும். போதியளவு உடல் அப்பியாசம் – மேன்மை நோக்கிய மனநிலையைத் தருகின்றது.

ஆமைதியான தூக்கமும், ஒழுங்கான ஆரோக்கியமான உணவும் மிகவும் அவசியமானதாகும். ஏதாவதொரு எல்லா உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் அடங்கிய, குறிப்பாக உயிர்ச்சத்து’பி’ அளவு கூடிய மாத்திரை எடுப்பது நன்மைபயக்கும். இவை சக்தி உற்பத்திக்கும், மூளை, நரம்புத் தொகுதியின் செயற்பாடுகளுக்கும் அவசியதாகும். மூலிகை சேர்மானத் தயாரிப்பான ‘அஸ்வக்கந்தா கெம்பிளைக்ஸ்’ மனவுளைச்சலை சமாளிக்கவும், கவனப்புலத்தை குவிக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் செய்யக்கூடிய மூலிகைகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை உடலின் செயற்பாடுகளுக்கான அரிதினல் சுரப்பியின் செயற்பாடுகளுக்கும் உதவுகிறது. இவற்றுடன் கூட நல்ல மீன் எண்ணெய குறை நிரப்பிகளில் ஒன்றான ‘ரோட்ரல் ஈ.எவ்.ஏ’ என்பதும் ஆரோக்கியமான மூளையின் செயற்பாட்டிற்கு முக்கியமானதாகும்.