பிரிவுகள்

இதய பகுதி
உயர் குருதி அழுத்தம்
இனப்பெருக்கப் பகுதி
சிறுநீர்த்-தொற்று(Bladder Infection)
என்டோமேற்றியோசிஸ்(Endometriosis)
விரைவில் விந்து வெளிப்படுதல்
கண்டிடா
வயிறு சம்மந்தமான
IBS எனும் குடல் எரிவு
Peptic Ulcers -வயிற்று புண்
Heartburn-நெஞ்செரிச்சல்
வாய்ப் பகுதி
Bleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)
உள ஆரோக்கியம்
டிப்பிறசன் – மன விரக்திநிலை
சுவாசத் தியானம்
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )
எலும்புத்தொகுதி
மூட்டு வலி
கண் பிரிவு
மகரந்த காய்ச்சல் (கே பீவர்)
கழிவகத் தொகுதி
படுக்கையில் சிறுநீர் கழித்தல்(Bed wetting)
மூல நோய்-Hemorrhoids
Diverticulitis - பதுங்கழல் (கண்மறைக்கும் குழாய் வளர்ச்சி)
Crohn’s-Disease-கிரோன்ஸ்-நோய்
கால் சம்மந்தமான
கீல் வாதம் – (கௌட்)
குருதி சம்மந்தமான
நீரிழிவு
தீய கொலஸ்ரோல்
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
சிறுநீரகப் பகுதி
சுக்கில சுரப்பி விரிவடைதல்(BHP)-Prostate gland
KIDNEY STONES – சிறுநீர் கல் (Renal Calculi)
தோல் சம்மந்தமான
விட்டிலிகோ-வெண் சரும நோய்
Boils (போயில்ஸ்)
Athlete’s foot (Fungal Infection)
முகப்பரு
தலைப் பகுதி
தலை முடியுதிர்வு
Headache-தலை வலி
ஒற்றைத்தலைவலி
நரம்புத் தொகுதி
ஏ.டி.எச்.டி
மூக்குப் பகுதி
நெற்ரி பொட் (மூக்கு கழுவும் உபகரணம்)
நுரையீரல் பகுதி
ப்றோன்சிடிஸ்-Bronchitis
எம்பசிமா -Emphysema
உடல் (பொது)
உடலில் நஞ்சகற்றும் பற்று
உடற்பருமனைக் குறைக்க வழி
மேலும் (பொது)
வெந்தயம்
சூரிய நமஸ்காரம் – சூரிய வணக்கம்
வெங்காயம்
தேன்
நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை
உடல் நிறை
மார்புப்பகுதி
சுவாசத்தொகுதி
ஆஸ்துமா
கை சம்பந்தமான
இடுப்புப்பகுதி
பிரிவுகள்

அலங்காரம்

அழகு – அலங்காரம்

அழகு – எனப்படுவது ஒருவரில், ஒரு இடத்தில், ஒரு பொருளில், ஒரு சிந்தனையில் அல்லது உத்தியில் காணப்படும் அம்சங்கள், புலனூடங்களினூடாக (பார்வை, தொடுகை, கேள்வி), சந்தோசம் அல்லது மகிழ்ச்சி, கழுத்து, திருப்தி போன்றவற்றை மனத்திற்கு தருவதாக (மூளையில் விளங்கப்படுவதாக) குறிக்கப்படுகிறது. தோற்றம், நிறம், அமைப்பு, ஓசை, தாளம், ஒருவரின் அமைப்பு (தோற்றம், பேச்சு, நிறம்) போன்றன புலனூடாகங்களால் ஒருவரால் வாங்கிக் கொள்ளப்படுகின்றன. அழகைப் பற்றி, அழகியல் பாடங்களிலும், சமூகவியலிலும், சமூக உளவியலிலும், சமூக கலாச்சாரத்திலும் கற்கப்படுகின்றன.

இங்கு மனிதரின் தோற்ற அழகு பற்றி கருதுகின்றோம். ஒருவர் அழகுள்ளவர் எனும் பொழுது அவர் பலராலும் மனப்பூர்வமாக வியந்து பாராட்டப்படுகிறார். பலர் அழகுள்ளவர்களாக இருந்த பொழுதிலும், குறிப்பிடத்தக்க சிலரே அழகிற்கு வரவிலக்கணமாக குறிக்கப்பட்டிருக்கிறார்கள். (உ-ம் கிளியோபற்றா, கெலன் (ரிறோய்), மரிலின் மன்றோ). உணர்வு பூர்வமாக அறியப்படும் அழகு என்பது இயற்கையுடன் ஒன்றித்து சமநிலையிலிருக்கும். மேலும் இது கவர்ச்சியைத் தருவதோடு, நல்ல மனநிலையையும் தருகின்றது. ‘அழகென்பது நோக்குபவரின் கண்களில் (மனதில்) தங்கியிருக்கின்றது’ எனவும் கூறப்படுகின்றது. அழகு என்பது இன்றைய நாட்களில் தோற்றத்தினால் ஏற்படும் கவர்ச்சியாக கருதப்படுகின்றது. உடலமைப்பில் கவர்ச்சியானவர்கள், அழகானவர்களாவும், நல்லவர்களாகவும், நல்ல குண நலன்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என பொதுவாக மதிப்பிடப்படுகின்றது. ஒருவரின் அழகு, அவரின் ஆழுமை, விவேகம், கருணை, வசியப்படுத்தும் தன்மை, எழில், பண்புடைமை ஆகிய அக அழகுகளையும், உடல் ஆரோக்கியம், இளமை, உடலின் சமச்சீர், உடல் சராசரியான அளவாக இருத்தல், பொதுவான தோல் நிறமுடையதாக இருத்தல் போன்ற புற தோற்ற அழகுகளையும் குறித்து நிற்கின்றது. இவற்றில் சமச்சீர் தன்மை (இலட்சணம்) புறவழகைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது.

ஒவ்வொருவரும் மற்றவர் கண்களில் தாம் அழகாக தோன்ற வேண்டுமென்பதற்காக பல வழிகளில் தம்மை அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

அலங்காரம் (ஸ்ரயில்) என்பது தன்னை ஒருவர், மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் முறையாகும். ஆடைகளை அணிந்தும், அணிகலங்களை சூடிக்கொள்வதனாலும் அழங்காரம் வெளிப்படுத்தப்படுகின்றது. கவர்ச்சியான உடல் அமைப்பு பெறுதல், சமகால பயன்பாட்டில் இருக்கும் ஆடை அணிதல், செயற்கை அழகு சாதனப் பொருட்கள் அணிதல், தலைமுடி அலங்காரம், தனிப்பட்ட சிறப்பலங்காரம் போன்ற பல வகையான முறைகளையும், அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தி மக்கள் தம்மை அலங்காரப்படுத்திக் கொள்கிறார்கள்.

இயற்கை அழகு சாதனப்பொருட்கள்:

இயற்கையிலிருந்து தருவிக்கப்படும் (மூலிகைகள், தாவர வேர்கள், தாவர வாசனை எண்ணெய்கள், பூக்கள், தாவர பகுதிகளிலிருந்து பெறப்படும் சாயங்கள்) தொன்றுதொட்டு அலங்காரப் பொருட்களாக பயன்பட்டு வந்துள்ளன. கிறீஸ்துவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும் தோலை நல்ல நிலையில் பேண பல இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தினர். இவற்றுள் பல இன்றும் பாவனையில் உள்ளது. (உ-ம் ஜொஜொபா எண்ணெய், சவ்ளவர் எண்ணெய், றோஸ் கிப் விதை எண்ணெய், விச்கேசல், சிய பட்டர், தீனி மெழுகு, அலோவீறா (கத்தாளை இனம்), ரீ (ற்)றீ எண்ணெய். வேறுபட்ட தோலின் தன்மைக்கேற்ப (உணர்திறன் மிகுந்த, உலர்வான, எண்ணெய்த்தன்மையான தோல் வகைகள்) இவற்றை தேவையான அளவுகளில் கலந்து பயன்படுத்தலாம். ஆயுர்வேத முறைகளிலும் பல மூலிகைகளும், இதர பொருட்களும் தோல் நலனைப் பேணும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தயாரிப்புக்களிலும் அலோவீறா, ஆமன்ட், அவகாடோ, கரட், மட்கழி, கொக்கோஆ, தேங்காய் எண்ணெய், சோளம், கியுகும்பர், ஈமூ எண்ணெய், கிங்கோபைலோபா, ஜின்செங், கிறேப் சீட் எண்ணெய், விச்கேசல், கோஸ் செஸ் நட், தேன் போன்றன இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

தலைமுடி ஒருவரின் அணிகலங்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றது. சமூக, கலாச்சார காரியங்களுக்காகவும், சமய காரணங்களுக்காகவும் தலைமுடியை முற்றாக மளிப்பதைத் தவிர, ஆண் பெண் இருபாலாரும் அடர்த்தியான கறுத்த தலை முடியைத்தான் வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆண்களைவிட பெண்கள் நீளமான தலைமுடியை வைத்திருந்தாலும், ஆண்களுக்கு தலை முடி உதிர்வும், தலையில் மொட்டை விழுதலும் அதிகமாக காணப்படுகின்றது. வயது முதிர்ச்சியடையும் பொழுது மயிரின் நிறத்துக்கு காரணமான நிறமணிகள் இழக்கப்படும் பொழுது மயிர் கருமை நிறத்தை இழக்கின்றது. இது ஒரு இயற்கையான முதிர் வயதின் அடையாளம் ஆகும். தலை முடியின் நிறமாற்றம் ஏற்படும் வயது ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும், பெண்களைவிட ஆண்களுக்கே நரை முதலில் தோன்றுகின்றது. வயதாகும் பொழுது இயற்கையாகவே இருபாலாருக்கும் தலை முடி உதிர்வு அல்லது அடர்த்தி குறைதல் நடைபெறுகின்றது. ஆனால் ஆண்களுக்கு ஏறக்குறைய 50 வயதளவில் (சில சமயம் முன்னதாகவே) தலையின் பின் பகுதியில் முற்றாக வட்டமாக மயிர் உதிர்தல் (மேல் பற்றன் போல்னஸ்) ஏற்படுகின்றது.

சிகைச்சாயம் (நியுற்ரா ரின்ற் ஸ்தாபன தயாரிப்புக்கள்)

இயற்கைத் தாவரப் பதார்த்ததிலிருந்து தயாரிக்கப்பட்ட சிகை(மயிர்) சாயங்கள் சிகைக்கு சேதம் ஏற்ப்படுத்தாதவை.

வயதில் தோன்றும் நரையை மறைக்கவோ அல்லது இள நரையை தெரியாமல் செய்யவோ அல்லது உங்களின் தோற்றத்தில் மாற்றம் காண்பிக்கவோ அல்லது உங்களின் காரணங்கள் எதுவானாலும் பயன்படுத்தலாம். தலை முடியின் நிறமாற்றம் முக்கியமானதாகின்றது.

நிற மாற்றத்தை சிகைச்சாயம் கொண்டு நிரந்தரமாகவோ அல்லது அரை நிரந்தரமாகவோ இலகுவில் மாற்றிவிடலாம். நிரந்தரமாக சிகைச் சாயப் பொருட்களில், ‘அமோனியா’, ‘றெசோர்சினோல்’ போன்ற நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் காணப்படுவதில்லை. இத்தயாரிப்புக்களைப் பயன்படுத்தும் பொழுது மயிர் உதிர்வு, ஒவ்வாமை, கண்களில் காயங்கள், எக்சிமா போன்ற தோல் வருத்தங்கள் ஏற்ப்படுவதில்லை.

சிகைச்சாயம் – தாவர பிளிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட நிரந்தர அல்லது அரை நிரந்தர சிகை நிறமூட்டிகள் அல்லது சாயவகைகள். நல்ல தரமான உற்பத்தி முறைகளுக்கமைய தயாரிக்கப்படுகிறது. கேசத்திற்கு மென்மையானகவும், அதே வேளை மிகவும் சிறந்த முறையிலும் சாயம் பெற்றுத்தரும் சிகைச்சாயம் கேச பராமரிப்பு பொருட்கள், நம்ப முடியாதளவு அதியுயர் தரமான உற்பத்தி முறையில் தயாரிக்கப்படுகின்றன. ஏனைய தயாரிப்புக்களை விட உயர்ந்து நிற்கின்றது.

சிகைச்சாயம் பொருட்களிலுள்ள தாவர பிளிவுகள் உங்களின் கேசத்திற்கு தருவன:

சோயா: தலைத் தோலின் மேல் ஒரு பாதுகாப்பு படையாக படிவதனால் தோலில் ஏற்ப்படும் அரிப்பை குறையச் செய்யும்.

ஓட்ஸ்: இதில் காணப்படும் லிநொயிக் அமிலம் தோலிலிருந்து நீரிழப்பைத் தடைசெய்வதாக காணப்படுகிறது.

சோளம்: ஆரோக்கியமான மயிர் வளர்ச்சியை தூண்டுவதோடு நிரம்பாத கட்டாக்காலி அணுக்களால் தோற் கலங்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தையும் தவிர்க்கிறது.

கோதுமை: மயிரிழைகளை ஒட்சியேற்றத்தை தவிர்க்க செய்யும் செயற்திறன் மிக்க ஈரப்படுத்துவதோடு, பலப்படுத்துகிறது. இதனுடன் உயிர்ச்சத்து ஈ, சேர்க்கப்படும் பொழுது, கல முதிர்ச்சி தாமதப்படுத்தப்படுகிறது.

தேங்காய்: கேசத்தை ஈரப்படுத்துவதற்கும், மென்மையாக்கும் தன்மைக்குமாக பெயர் போன பொருட்களாகும்.

சிகைச்சாயம் தனித்துவமான தயாரிப்பானது, கேசசாயத்திற்கு 100{4e5cadf4f2de652ec3ea92e6af58f44c09e21a0c27dff34d502478323296dea3} உத்தரவாதம் தருகிறது. 29 வேறுபட்ட நிறச் சாயங்கள்: இயற்கையான கறுப்பிலிருந்து – செம்படை நிறம், மகோகனி, செம்பு நிறத்திலிருந்து, சிவப்பு வரை கிடைக்கின்றன. சிகைச்சாயம் உலர்ந்த பாதிப்படைந்த, சோபை இழந்த கேசத்தை மேம்படுத்தும்.

சிகைச்சாயம் (றீபிளெக்ஸ்): இதுவொரு அரை-நிரந்தரமான கேச சாயமூட்டியாகும். இலகுவில் காயம் படக்கூடிய தலைத்தோலிற்கு சிறந்ததாகும். இதில் ‘அமோனியா’, ‘றெசோர்சினோல்’ ‘பெறொக்சைட்’, ‘பிபிடீ’ போன்ற எதுவும் சேர்க்கப்படுவதில்லை. தாவர பிளிவுகளையும், உயிர்ச்சத்து பீ 5 உட்பட வேறு போசாக்குப் பொருட்களையும் கொண்டிருக்கிறது. அதிக சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து, கேசத்தை புத்துயிர்ப்பூட்டுவதற்காக, சூரிய ஒளியை வடிகட்டி தடைசெய்யும் படையொன்றையும் கொண்டிருக்கிறது.

10 உற்சாக மூட்டக்கூடிய நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு றீபிளெக்ஸ் பெட்டியினுள்ளும், சாயம், சம்பூ, சீரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதனால் நான்கு கிழமைகளுக்கு ஒரு தடவை உங்களின் கேச நிறச் சாயலை மாற்றுவதனால், உங்களின் தோற்றப் பொலிவை மாற்றிவிடலாம்.

முக்கிய குறிப்பு: இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு, 48 மணித்தியாலங்களுக்கு முன்பதாக தோலுணர்வு சோதனை செய்து பார்ப்பது முக்கியமானதாகும். இதன் மூலம் குறிப்பிட்ட தயாரிப்பில் ஏதாவது காரணத்தால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட கூடுமா எனக் கண்டு கொள்ளலாம்.

நச்சுரல் மென் – தயாரிப்பு – ஆண்களுக்கான, கேச சாயம், சிந்தாத களிம்பு வடிவத்தில் 6 நிறச் சாயங்களில் கிடைக்கிறது. இதுவொரு இயற்கையான கேச சாயமாகும்.

நச்சுரல் மென் – ஏனைய சிகைச்சாய தயாரிப்புக்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. இது வழமையான ‘அமோனியா’, ‘றெசோர்சினோல்’ ‘பெறொக்சைட்’, ‘பிபிடீ’ ‘ஏ-நப்த்தோல்’ போன்ற இரசாயனங்களைக் கொண்டிருப்பதில்லை. மேலும் பயன்படும் இரசாயனங்களும் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுகிறது.

ஒரு பெட்டி சாயம் இரு தடவைகள் பயன்படுத்தப் போதியதாகும்.

குறிப்பு : இப்பகுதி சம்மந்தப்பட்ட சில பிரபலமான தயாரிப்புக்ககளை, தயாரிப்புகள் பக்கத்தில் பார்க்கவும். நன்றி…